மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் ஒரிஜினல் பாய்ஸும் இருக்காங்களா… அந்த சீனை சரியா பார்த்தீங்களா?

by Akhilan |
மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் ஒரிஜினல் பாய்ஸும் இருக்காங்களா… அந்த சீனை சரியா பார்த்தீங்களா?
X

Manjummel boys: மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களும் பெரிய அளவில் கொண்டாடிய மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தில் அப்படத்தின் உண்மை கதையின் நாயகர்களும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மஞ்சும்மெல் கிராமத்தில் இருந்து கொடைக்கானலுக்கு ஒரு கிளப்பை சேர்ந்த நண்பர்கள் டூர் வருகின்றனர். அங்கு அவர்களுக்கு குணா குகையை சுற்றிப் பார்க்கலாம் என்ற ஐடியா வருகிறது. எல்லோரும் அந்த குகையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட வந்த நண்பர்களில் ஒருவரான சுபாஷ் என்பவர் கீழே குழிக்குள் விழுந்து விடுகிறார்.

இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

அவரை நண்பர்கள் குழு இணைந்து எப்படி மீட்டார்கள் என்பதை மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற பெயரில் படமாக வெளியிட்டனர். இப்படத்தில் குணா படத்தின் பாடலும் இணைந்து இருந்த நிலையில் தமிழ் ரசிகர்களும் படத்தை பெரிய அளவில் கொண்டாடினர். தமிழ் திரையரங்குகளில் படம் ஹவுஸ்ஃபுல் ஆகி கோடிக்கணக்கில் வருமானத்தை குறித்தது.

இப்படத்தில் குட்டன் என்ற கேரக்டரில் நடித்த சௌபின் சகீர் தன்னுடைய தந்தையுடன் இணைந்து இப்படத்தை தயாரித்தார். கிளைமாக்ஸில் இணைக்கப்பட்டிருந்த கண்மணி அன்போடு காதலன் பாடல் படத்திற்கு பெரிய அளவில் பலமாக அமைந்தது. திரையரங்குகளில் ஹிட்டடித்த இப்படம் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி மேலும் பல பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: ரஜினியும் கமலும் சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? எப்பவுமே கெத்து சூப்பர்ஸ்டார்தான்..!

இந்நிலையில் இப்படத்தில் உண்மையான மஞ்சும்மெல் பாய்ஸ் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் நடக்கும் தக் ஆப் வார் போட்டியில் படத்தின் ஹீரோக்களுக்கு எதிராக நின்ற குழு தான் உண்மையான மஞ்சும்மெல் பாய்ஸ். அவர்களின் காட்சிக்கு சுவாரஸ்யத்தினை கூட்டவே அந்த போட்டியில் அவர்கள் ஜெயித்ததாக காட்சிகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Next Story