Connect with us
manjummel

Cinema News

மஞ்சுமெல் பாய்ஸ் விவகாரம்!.. இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் பதில்!.. பஞ்சாயத்து முடியாது போல!..

கடந்த சில வருடங்களாகவே இசைஞானி இளையராஜா தனது பாடல்களை வியாபார ரீதியாக தனது அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் சரியான இழப்பீடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து பலருக்கும் நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.

இளையராஜாவின் நெருங்கிய நண்பரும், பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கே இசைக்கச்சேரிகளில் தனது பாடல்களை பாடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பினார். இதனால் பலரும் ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், வியாபாரா ரீதியாக பயன்படுத்தியவர்களுக்கு மட்டுமே ராஜா காப்பூரிமை கோருவது பலருக்கும் புரியாமல் அவரை திட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சக்கைப்போடு போட்டாளே சவுக்கு கண்ணால!.. சமந்தாவை இப்படி பார்த்தா ராத்திரி தூக்கம் போயிடுமே பசங்களா!..

அறிவுசார் சொத்து என சொல்வார்கள். அந்த அடிப்படையில்தான் இளையராஜா இதை செய்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள கூலி படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவில் இளையராஜாவின் சில பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தனது அனுமதியின்றி ‘ கண்மணி அன்போடு காதலன்’ பாடலை படக்குழு பயன்படுத்தி இருப்பதாக சொல்லி இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக செய்திகள் வெளியானது. தனது பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லையேல் சரியான இழப்பீடு கொடுக்க வேண்டும் என இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: நடிகரால் தற்கொலைக்கு முயன்ற ஸ்ரீபிரியா! இப்படி ஒரு காதலா? எந்த நடிகருடன் தெரியுமா?

மஞ்சுமெல் பாய்ஸ் மலையாள மொழியில் எடுக்கப்பட்டு தமிழகத்திலும் வெளியாக வசூலில் சக்கை போடு போட்டது. கொடைக்கானல் பகுதியில் இருக்கும் குணா குகையை மையமாக வைத்து இப்படம் உருவானது. இப்படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் கண்மணி அன்போடு காதலன் பாடல் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம். இளையராஜா தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என மஞ்சுமெல் பாய்ஸின் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்திருக்கிறது. படல் பயன்படுத்துவது தொடர்பாக யாரிடம் அனுமதி பெற்றார்கள் என்கிற விபரம் இனிமேல் தெரியவரும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top