மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த இரண்டு வாரங்களாக சக்கைப்போடு போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிவேகமாக 100 கோடி வசூலை தாண்டிய படம் என்கிற பெருமையை பெற்றுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை இதுவரை எந்த ஒரு ஓடிடி தளமும் வாங்கவில்லை என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கேப்டன் போல மாறிய கமல்!.. ரஜினிக்கு வந்த நெருக்கடி!.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!…
இன்னமும் ஷூட்டிங் முடியாத அஜித்தின் விடாமுயற்சி படம் வரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி வைத்துள்ள நிலையில், தியேட்டரில் வெளியாகி நல்லா ஓடிக் கொண்டிருக்கும் மலையாள படத்தை ஏன் வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயங்குகின்றன என்கிற கேள்வி எழுந்துள்ளது.
21 கோடியில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைபடத்தை 21 கோடிக்கு ஓடிடி நிறுவனங்களிடம் விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனம் பேராசை படுவது தான் இதற்கு காரணம் என்கின்றனர். நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகப்படியாக 10.5 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு முன்வந்த நிலையிலும், அந்த டீல் பிடிக்கவில்லை என சொல்லி விட்டார்களாம்.
இதையும் படிங்க: நாய்க்கு கிடைத்த மரியாதை ரஜினிக்கு கிடைக்கலயே!.. சூப்பர்ஸ்டார் வாழ்வில் நடந்தது இதுதான்!..
100 கோடி வசூல் செய்துள்ள படம் என்பதால் 20 கோடிக்கு மேல் ஓடிடியில் வியாபாரம் பார்க்க படக்குழுவினர் ஆசைப்படுகின்றனர். அதன் காரணமாகவே இந்த படத்தை யாரும் சீண்டவில்லை என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லைகா தயாரிப்பில் தமிழில் வெளியான அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 மற்றும் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்த லால் சலாம் உள்ளிட்ட படங்களும் ஓடிடியில் வியாபாரம் ஆகாததற்கு காரணம் அதிக பணத்தை தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்பார்ப்பது தான் என்றும் ஓடிடி நிறுவனங்கள் முன்பு போல இல்லாமல் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், குறைந்த விலைக்கு மட்டுமே படங்களை வாங்க முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.
ஏ ஆர்…
Ayothi: அயோத்தி…
திரைத்துறையில் நடிகர்…
விஜய் டிவியில்…
SK_ Keerthi…