Connect with us
manjumel

Cinema News

வசூலில் பட்டைய கிளப்பும் மஞ்சுமெல் பாய்ஸ்!. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கோடியா?!..

திடீர் திடீரென மற்றமொழி திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்று பரபரப்பாக பேசப்படுவதோடு வசூலையும் அள்ளிவிடும். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் அப்படத்தை பற்றி சிலாகித்து பேச துவங்கிவிடுவார்கள்.

அப்படித்தான் இப்போது கடந்த 22ம் தேதி வெளியான மலையாள படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. சந்தானபாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1991ம் வருடம் வெளியான திரைப்படம்தான் குணா. இந்த படத்தில் ஒரு குகையில் தனது காதலியை கொண்டு போய் வைத்திருப்பார் கமல். இந்த காட்சிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோபத்தில் கங்கை அமரன் என்னை பழிவாங்கினார்!.. டைம் பாத்து அடிச்ச கவிஞர் வாலி!..

பல நாட்கள் கமலும் சந்தானபாரதியும் தேடி அலைந்து அந்த குகையை கண்டுபிடித்து அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள். இந்த படம் வெளியான அந்த இடத்திற்கு ‘குணா குகை’ என்றும் பெயர் வந்தது. அதனால், சுற்றுலா பயணிகள் பலரும் அங்கு செல்ல துவங்கினார்கள். அந்த இடம் ஆபத்தானது. சிலர் அதில் இறந்தும் போனார்கள். எனவே, அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

manjumel

மஞ்சுமெல் படத்தில் வாலிபர்கள் குழுவாக சேர்ந்து அந்த இடத்திற்கு செல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சில காட்சிகளை அங்கு எடுத்துவிட்டு பல காட்சிகளை செட் அமைத்து எடுத்திருக்கிறார்கள். மேலும், சரியான ஒரு இடத்தில் குணா படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலையும் ஓடவிட்டுள்ளனர். இது சினிமா ரசிகர்களுக்கு கூசும்ப்ஸ் காட்சிகளாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்கில் தனுஷுக்கு இவ்ளோ கோடி சம்பளமா? இசைஞானினாலே காஸ்ட்லிதான் போல

இந்த படத்தை பார்த்த கமல் அப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இதைத்தொடர்ந்து மஞ்சுமெல் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. சென்னையில் இரவு காட்சிகளுக்கு அதிக முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை ஆகி வருகிறது. ஹிருதயம் படத்திற்கு பின் தமிழகத்தில் ஒரு கோடி வசூலை தொடும் படமாக மஞ்சுமெல் பாய்ஸ் படம் இருக்கிறது.

இதுவரை உலகம் முழுவதிலும் இப்படம் ரூ.50 கோடியை வசூல் செய்துவிட்டது. இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் இப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மனுஷன் யாருக்குத்தான் என்ன பண்ணல? இளையராஜா செய்த செயலால் கதறி அழுத பாடகர் மனோ!

google news
Continue Reading

More in Cinema News

To Top