இந்த 'மன்மதலீலை' வெங்கட் பிரபுவுக்கு தெரியுமா? தெரியாதா? அதுக்குள்ள பஞ்சாயத்தா?!

by Manikandan |   ( Updated:2022-01-19 09:12:09  )
இந்த மன்மதலீலை வெங்கட் பிரபுவுக்கு தெரியுமா? தெரியாதா? அதுக்குள்ள பஞ்சாயத்தா?!
X

இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு அதாவது ஒரு பெரிய ஹிட் கொடுத்துவிட்டார் என்றால் அடுத்து எதாவது பெரிய ஹீரோவை இயக்குவார் என எதிர்பார்த்தால், அடுத்து ஒரு சிறு பட்ஜெட் திரைப்படத்தையோ அல்லது வளர்ந்து வரும் ஹீரோ படத்தையோ இயக்குவார்.

அப்படித்தான் தற்போது மாநாடு திரைப்படத்தின் அதிரி புதிரி ஹிட்டை அடுத்து வெற்றிமாறன், ஒரு சிறு இடைவெளியில் ஒரு சிறு பட்ஜெட் திரைப்படத்தை எடுத்து முடித்துவிட்டார். இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார்.

அந்த படத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. பட தலைப்பில் தான் பிரச்சனையே. படத்தின் தலைப்பு மன்மத லீலை. இதே தலைப்பில் கமல்ஹாசன் நடிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு படம் தயாராகி நல்ல வெற்றியை பதிவு செய்தது. அந்த தலைப்பை மன்மத லீலை தயாரிப்பாளரிடம் முறையாக பெற்றுத்தான் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டது என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சார்பாக கடிதம் வெளியாகியுள்ளது. அதில் அவரது படைப்புகளின் தலைப்பு வைத்துவிட்டு அதனை களங்கப்படுத்திவிடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் முறையாக தலைப்பை வாங்கிவிட்டனரா அல்லது வேறு ஏதேனும் குளறுபடி நடந்துள்ளதா என்பது வரும் காலங்களில் தெரியவரும்.

Next Story