Connect with us
danush

Cinema History

யாருக்குமே அந்த பாட்டு பிடிக்கல!.. ஆனா படம் ஓடினதே அந்த பாட்டலதான்!.. தனுஷ் படத்தில் நடந்த மேஜிக்…

துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. ஏனெனில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த கிளுகிளுப்பான காட்சிகள்தான். அடுத்து மீண்டும் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். ஒரு மாதிரி சைக்கோ கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் மூன்றாவதாக அவர் நடித்து வெளியான திரைப்படம் திருடா திருடி.

thiruda thirudi

இந்த படத்தில் பெரிதாக கதை ஒன்றுமில்லை. கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையே இருக்கும் ஈகோதான் கதை. திருச்சியில் கதை நடப்பது போல் இப்படத்தை சுப்பிரமணிய சிவா இயக்கியிருந்தார். சாயா சிங், கருணாஸ், மாணிக்க வினாயகம், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 2003ம் வருடம் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சக்கை போடு போட்டது.

thiruda thirudi

அதாவது தனுஷுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது. எனவே, தயாரிப்பாளர்களின் பார்வை தனுஷ் பக்கம் திரும்பியது. ஏனெனில் அறிமுகமாகி தொடர்ந்து 3 படங்கள் வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் தனுஷுக்கு அமைந்தது. திருடா திருடி படத்திற்கு தினா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற மன்மத ராசா பாடல் பட்டிதொட்டியெங்கும் பாடியது. இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் வெற்றிக்கே இந்த பாடல் முக்கிய காரணமாக இருந்தது. சென்னையில் தொடர்ந்து பல நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக இப்படம் ஓடியது. ஆனால், இந்த படம் உருவான போது மன்மத ராசா பாடல் இயக்குனருக்கு மட்டுமே பிடித்திருந்தது. தயாரிப்பாளர் உட்பட பலருக்கும் அந்த பாடல் பிடிக்கவில்லையாம்.

thiruda thirudi

படம் நன்றாக வந்திருக்கு. ஆனா இந்த பாட்டு வேண்டாம் என பலரும் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், சுப்பிரமணிய சிவா அதை ஏற்கவில்லை. இந்த பாடல் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்பதில் உறுதியாக இருந்தார். கதைப்படி தனுஷ், சாயாசிங் இருவருமே அராத்தான கதாபாத்திரங்கள். எனவே, இருவருக்குமான டூயர் மெலோடியாக இல்லாமல் அதிரடி குத்துப்பாட்டாக, ஃபாஸ்ட் பீட்டாக இருக்க வேண்டும் என யோசித்து இந்த டியூனை இசையமைப்பாளரிடம் வாங்கியிருக்கிறார்.

அவர் நினைத்தபடியே அந்த பாடலும் ஹிட்.. படமும் சூப்பர் ஹிட் ஆனது.

google news
Continue Reading

More in Cinema History

To Top