
Cinema News
மன்மதன் நான் நடிக்க வேண்டிய படம்.. எங்க அம்மா மேல சத்தியம்.! அதகளம் செய்யும் சிம்பு வெறியர்.!
கடந்த 2004ஆம் ஆண்டு சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடித்து ஏ.ஜே.முருகன் என்பவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் மன்மதன். இந்த படத்திற்கான கதை, திரைக்கதையை சிலம்பரசன் தான் எழுதி இருந்தார்.
இந்த படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்து இருந்தார். சிம்பு, மொட்ட மதன், மதன் குமார் என இரு வேடங்களில் நடித்து இருப்பார். இதில் மொட்ட மதன் எனும் கதாபத்திரம் சுற்றி தான் படம் நகரும்.
இந்த படம் பற்றி அண்மையில், சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் ஒரு நேர்காணலில் ஒரு தகவலை குறிப்பிட்டார். அதாவது, ‘ முதலில் மன்மதன் படத்தில் முக்கியமாக இருக்கும் மொட்ட மதன் கதாபாத்திரத்தில் நடிக்க நான் தான் ஒப்பந்தமானேன்.
இதையும் படியுங்களேன் – லண்டன் பறந்த அஜித்.! மீண்டும் வலிமையை ஞாபகபடுத்திய H.வினோத்.! பதற்றத்தில் ரசிகர்கள்…
அப்போது அது சிறிய கதாபாத்திரம் தான். அதன் பிறகு படத்தில் அந்த கதாபாத்திரம் பெரிதாகவே, சிம்புவே அந்த கதாபாத்திரத்தில் நடித்து விட்டார். இது என் தாயின் மீது ஆணை.’ என கூறி பலரையும் வியக்க வைத்துவிட்டார்.