Connect with us

Cinema History

அன்னிக்கு எஸ்.பி.பி லேட்டா வரலைனா சான்ஸே கிடைச்சிருக்காது!.. மனோவிற்கு அடிச்ச அதிர்ஷ்டம்…

தமிழ் சினிமா பாடகர்களில் பெரும் உச்சத்தை பிடித்தவர் எஸ்.பி பாலசுப்ரமணியம். சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்போது வரை தமிழ் சினிமாவில் அவருக்கு நிகரான ஒரு பாடகர் இல்லை என்றே சொல்லலாம்.

சிறப்பான குரல் வளத்தை கொண்டவர் எஸ்.பி பாலசுப்ரமணியம். நடிகர் ரஜினிக்கு அதிகமான பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி.பி.  தனது படங்களில் முதல் பாடலை எஸ்.பி.பி பாடினால் படம் வெற்றியடையும் என ஒரு செண்டிமெண்டை கொண்டிருந்தார் ரஜினி.

இதனால் முத்து, பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என அப்போது முதல் இப்போது வந்த அண்ணாத்தே திரைப்படம் வரை ரஜினி படங்களில் முதல் பாடலை எஸ்.பி.பிதான் பாடி வந்தார். எஸ்.பிபி போலவே குரல் வளம் கொண்ட மற்றொரு பாடகர் மனோ.

சமயத்தில் மனோ பாடும் பாடல்கள் கேட்பதற்கு எஸ்.பி.பி பாடியது போலவே இருக்கும். ஆரம்பத்தில் சென்னைக்கு சினிமாவில் நடிப்பதற்கே வாய்ப்பு தேடி வந்தார் மனோ. அங்கு இருக்கும் ஒரு ஹோட்டலில் அப்போது 30 ரூபாய் சம்பளத்திற்காக பாட்டு பாடி வந்தார். அதற்கு இடையே நடிப்பதற்கும் வாய்ப்பு தேடி வந்தார்.

மனோவிற்கு வந்த வாய்ப்பு:

அப்போது ஒரு தெலுங்கு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் மனோ. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பாடுவது போன்ற காட்சி இருந்தது. அப்போது மனோவின் குரலுக்கு பாடுவதற்காக எஸ்.பி.பி வரவேண்டும். ஆனால் அவர் வரவில்லை.

msv

msv

அந்த படத்திற்கு எம்.எஸ்.விதான் இசையமைப்பாளராக இருந்தார். அவரிடம் சென்ற மனோ “சார் எனக்கும் கொஞ்சம் பாட தெரியும் சார்” எனக்கூறவும் அவரிடம் பாடலை சொல்லிக்கொடுத்துள்ளார் எம்.எஸ்.வி. அதை அப்படியே சிறப்பாக பாடியுள்ளார் மனோ.

அதை பார்த்த எஸ்.பி.பி பிறகு மனோவை அவரது உதவியாளராக சேர்த்துக்கொண்டார். இதை ஒரு பேட்டியில் மனோ கூறியிருந்தார். அன்று மட்டும் எஸ்.பி.பி தாமதமாக வரவில்லை என்றால் மனோவிற்கு இந்த வாய்ப்பே கிடைத்திருந்திருக்காது.

இதையும் படிங்க: இவுங்க ரெண்டு பேரும் சந்திக்கனும்ன்னு எழுதி இருந்திருக்கு- பாரதிராஜாவும் இளையராஜாவும் முதன்முதலாக சந்திச்சது இப்படித்தான்?

google news
Continue Reading

More in Cinema History

To Top