மனோபாலாவுக்கு இந்த நடிகைகள் எல்லாம் இவ்வளவு குளோஸா?... என்னப்பா சொல்றீங்க!
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞராக திகழ்ந்து வந்த மனோபாலா, கடந்த 3 ஆம் தேதி கல்லீரல் பிரச்சனை காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர். மனோபாலா தொடக்கத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் அவர் இயக்கிய முதல் திரைப்படம் "ஆகாய கங்கை'. அத்திரைப்படம் சரியாக ஓடவில்லை.
எனினும் அதன் பின் அவர் இயக்கிய "பிள்ளை நிலா" திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து மனோபாலா, "ஊர்க்காவலன்", "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்", "மல்லு வேட்டி மைனர்" போன்ற பல வெற்றித்திரைப்படங்களை இயக்கினார். மேலும் "சதுரங்க வேட்டை", "பாம்புச்சட்டை", "சதுரங்க வேட்டை 2" ஆகிய திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மணோபாலாவின் தோழியான நடிகை குட்டி பத்மினி, மனோபாலா குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது மனோபாலாவிடம் மிக நெருங்கிய தோழிகளாக மூன்று நடிகைகள் இருந்தார்கள். ஒருவர் சுஹாசினி, இன்னொருவர் ராதிகா, மற்றொருவர் குட்டி பத்மினி. மனோபாலா இயக்கிய முதல் திரைப்படமான "ஆகாய கங்கை" திரைப்படத்தின் கதாநாயகி சுஹாசினிதான், இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்தார்களாம். ராதிகாவுடன் இணைந்து "சிறகுகள்" என்ற நாடகத்தை இயக்கியிருக்கிறார் மனோபாலா. அதே போல் ராதிகாவை கதாநாயகியாக வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் மனோபாலா. மேலும் குட்டி பத்மினியுடன் இணைந்து சில சீரியல்களை இயக்கியிருக்கிறார் மனோபாலா.