தளபதி 67 குறித்து தெரியாத்தனமாக வாய் விட்ட மனோபாலா… ஆதாரத்தை வைத்து மிரட்டி வரும் நெட்டிசன்கள்…
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அதே நாளில் “வாரிசு” படத்துடன் மோதவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் “தளபதி 67” திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைந்துள்ளார். “மாஸ்டர்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர்.
“தளபதி 67” திரைப்படத்தில் விஜய்க்கு ஆறு வில்லன்கள் என கூறப்பட்டது. சஞ்சய் தத், அர்ஜூன் போன்ற பலர் “தளபதி 67” திரைப்படத்தில் வில்லன்களாக நடிக்கின்றனர் என தகவல்கள் வந்தன. அதே போல் அதில் ஒரு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் “தளபதி 67” திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என கூறினாராம்.
மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அவரே கூறினார்.
இந்த நிலையில் இயக்குனரும் பிரபல காமெடி நடிகருமான மனோ பாலா, நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் “தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. லோகேஷ் கனகராஜ்ஜையும் தளபதி விஜய்யையும் சந்தித்தேன்” என பகிர்ந்திருந்தார்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, மனோபாலா சில நிமிடங்களிலேயே அந்த டிவிட்டை நீக்கினார். அதன் பின் “தளபதி 67 குறித்த டிவிட்டை நீக்கிவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என ஒரு டிவிட்டை பகிர்ந்திருந்தார்.
ஆனால் மனோபாலா “தளபதி 67” திரைப்படம் குறித்து பகிர்ந்திருந்த அந்த டிவிட்டர் பதிவை நெட்டிசன்கள் பலரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் அந்த ஸ்கிரீன்ஷாட்டை மனோபாலாவின் டிவிட்டர் பக்கத்திலேயே பதிவிட்டு பீதியை கிளப்புகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் அந்த வெற்றி காம்போவுடன் இணையவுள்ள லவ் டூடே இயக்குனர்… ஹீரோ யார்ன்னு தெரியுமா??
எனினும் “தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்க உள்ளதாக பல நாட்களுக்கு முன்பே ஒரு தகவல் வெளியானது. அதன் படி நேற்று அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது.