கடைசி வரை மகனை பார்க்க முடியலயே!.. சோகத்தில் முடிந்த மனோபாலா மரணம்…

by சிவா |   ( Updated:2023-05-04 06:36:44  )
manobala
X

manobala

நடிகர் மனோபாலவின் மரணம் திரையுலகை உலுக்கியுள்ளது ஏனெனில், 40 படங்கள் இயக்கியவர், பல நூறு படங்களில் நடித்தவர் என்பது மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பிடித்தமான மனிதராக அவர் இருந்தார். திரையுலகில் பல பஞ்சாயத்துக்களை தீர்க்க மனோபாலாவைத்தான் கூப்பிடுவார்களாம். சீரியஸான பிரச்சனையில் கூட உள்ளே ஒரு காமெடியை போட்டு அந்த இடத்தை கலகலக்க வைத்து லேசாக்கி பிரச்சனையை தீர்த்துவிடுவாராம்.

தமிழ் திரையுலகில் எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வந்தவர். படப்பிடிப்பு தளத்தில் எல்லோரையும் ஜோக் சொல்லி சிரிக்க வைப்பார். படத்தின் ஹீரோக்கள் இவரை பேசவிட்டு கேட்டுக்கொண்டே இருப்பார்களாம். வாழ்க்கையில் எதையும் சீரியஸாக எடுத்து கொள்ளமாட்டார். இவரது ஒல்லியான தேகத்தை அவரின் காதுபடவே ரசிகர்கள் கிண்டலடித்தாலும் கண்டு கொள்ள மாட்டாராம்.

ஆனால், இவருக்குள்ளும் சில கவலைகள் இருந்துள்ளது. இவருக்கு குழந்தை இல்லை. எனவே, ஒரு மகனை தத்தெடுத்து வளர்த்தார். அவரை சொந்த மகனாக வளர்த்துள்ளார். சமீபத்தில் அவருக்கு தடபுடலாக திருமணமும் செய்து வைத்தார். தற்போது அந்த மகன் வெளிநாட்டில் வசிக்கிறார்.

Manobala
Manobala

எப்போதும் கலகலப்பாக பேசுவதை விரும்பும் மனோபாலாவுக்கு வீட்டில் மகன் இல்லாத தனிமை வாட்டியுள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இது இன்னமும் அதிகரித்துள்ளது. இதற்காகத்தான் ஒரு யுடியூப் சேனலை உருவாக்கி அதில் பிரபலங்களை பேட்டியெடுத்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரின் சோகம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போதும், அவரின் உயிர் பிரிந்த நேரத்திலும் அவரின் மகன் அருகில் இல்லாமல் போனதுதான் என நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.

Next Story