எக்ஸ்க்யூஸ் மீ ! நீங்கதான் பாரதிராஜாவா?... வாயில் சிகரெட்டுடன் வாய்ப்பு கேட்ட மனோபாலா… சேரும்போதே இப்படியா??

by Arun Prasad |   ( Updated:2022-10-03 15:36:03  )
எக்ஸ்க்யூஸ் மீ ! நீங்கதான் பாரதிராஜாவா?... வாயில் சிகரெட்டுடன் வாய்ப்பு கேட்ட மனோபாலா… சேரும்போதே இப்படியா??
X

தமிழின் முன்னணி இயக்குனரும் நடிகருமான மனோபாலா, “ஆகாய கங்கை”, “பிள்ளை நிலா”, “ஊர் காவலன்” என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தொடக்கத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மனோபாலா, பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

அதாவது தனது சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்த மனோபாலாவுக்கு, கமல்ஹாசனுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் கமல்ஹாசன் மனோபாலாவை பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேரும்படி கூறியிருக்கிறார். மேலும் ஒரு நாள் மனோபாலாவிற்கு கார் அனுப்பி பாரதிராஜாவை பார்த்துவரச்சொல்லியிருக்கிறார்.

இது குறித்து மனோபாலா “உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்க காரில் சென்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என நகைச்சுவையாக அப்பேட்டியில் கூறினார்.

மனோபாலாவிற்கு சிக்ரெட் பழக்கம் இருந்திருக்கிறது. பாரதிராஜாவை பார்க்க காரில் வந்து இறங்கியபோதே சிக்ரெட் பிடித்துக்கொண்டுத்தான் இறங்கினாராம். வாயில் சிக்ரெட் பிடித்துகொண்டே பாரதிராஜாவிடம் சென்று “ஆர் யூ பாரதிராஜா?, கமல்ஹாசன் உங்களிடம் என்னை வேலைக்கு சேர்த்துக்கொள்ள அனுப்பியிருக்கிறார்” என கூறியிருக்கிறார்.

இது குறித்து மனோபாலா “அன்று நான் கமல்ஹாசன் பெயரை மட்டும் சொல்லவில்லை என்றால் எனக்கு அடி விழுந்துருக்கும்” என்று கூறினார். மேலும் அப்போது பிரிந்திருந்த பாக்யராஜையும் பாரதிராஜாவையும் மனோபாலாதான் மீண்டும் இணைத்திருக்கிறார்.

அதனை தொடர்ந்துதான் பாரதிராஜா பாக்யராஜை வைத்து “புதிய வார்ப்புகள்” என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்தது.

Next Story