தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக பன்முக திறமைகள் கொண்ட ஒரு மனிதராக வலம் வந்தவர் மனோபாலா. இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து அதன் பிறகு இயக்குனர் ஆகி பல படங்களை இயக்கி இருக்கிறார்.
கிட்டத்தட்ட 40 படங்களை இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் மனோபாலா.
ஆகாய கங்கை என்ற தமிழ் படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் மனோபாலா. படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் பல நூறு படங்களில் நடித்தவர் மனோபாலா .அனைவருக்கும் பிடித்தமான ஒரு நல்ல மனிதராக வலம் வந்தார்.
படப்பிடிப்பிலும் சரி வெளியிடங்களிலும் சரி இவருடன் இருக்கும் அனைவரையும் சிரிக்க வைப்பதே மனோபாலாவின் முதல் வேலையாக இருக்குமாம். அந்த அளவுக்கு தன்னை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பண்பை கொண்டவர்.
இவரின் இயக்கத்தில் பல நல்ல படங்கள் வந்தாலும் கார்த்திக் நடிப்பில் வெளியான கிழக்கு வாசல் என்ற திரைப்படத்தை இவர் தவறவிட்டிருக்கிறார். கார்த்திக், ரேவதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த கிழக்கு வாசல் திரைப்படம் 175 நாட்களை தாண்டி மிகவும் வெற்றிகரமாக ஓடியது.
சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்த அந்தப் படத்தை முதலில் இயக்குவதாக இருந்தவர் மனோபாலா தானாம். அந்த சமயம் என் புருஷன் எனக்கு மட்டும்தான் படத்தின் ஹிந்தி பதிப்பை இயக்குவதற்காக மனோபாலா மும்பைக்கு சென்று விட்டாராம். அப்பொழுது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.வி. உதயகுமாரிடம் கிழக்கு வாசல் திரைப்படத்தை இயக்கும் பொறுப்பை கொடுத்து விட்டாராம்.
இல்லையென்றால் கிழக்கு வாசல் திரைப்படத்தை மனோபாலா தான் இயக்கியிருப்பார் என்று பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின் போது கூறினார்.
இதையும் படிங்க : விடுதலை இரண்டாம் பாகத்தில் தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கும் விஜய் சேதுபதி… சூரிக்கு போட்டியா?
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…