ரஜினி படமா! இதோ வந்துட்டேன்… கலைஞருக்கே “நோ” சொன்ன பிரபல காமெடி நடிகர்… என்ன நடந்தது தெரியுமா?

by Arun Prasad |   ( Updated:2023-02-26 07:04:49  )
Manobala
X

Manobala

நடிகர் மனோபாலாவை ஒரு காமெடியனாகத்தான் தற்போதைய ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் என்ற தகவலை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

தமிழில் “பிள்ளை நிலா”, “சிறைப் பறவை”, “என் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. தமிழ் மட்டுமல்லாது கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

Manobala

Manobala

அதே போல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பஞ்சவர்ணம்”, “புன்னகை” போன்ற சீரீயல்களையும் இயக்கியுள்ளார் மனோபாலா. இவ்வாறு பல ஆண்டுகள் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இவர்.

இவர் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வந்த காலகட்டத்தில் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு இவருக்கு வந்தது. அப்போது நடைபெற்ற ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Oorkavalan

Oorkavalan

1987 ஆம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து “ஊர்க்காவலன்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் மனோபாலா. இத்திரைப்படத்திற்கான வாய்ப்பு அவருக்கு வருவதற்கு முன்பு கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார் மனோபாலா. இந்த நேரத்தில் ரஜினிகாந்த்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்ததால் இதனை தவறவிட மனோபாலா நினைக்கவில்லை.

ஆதலால் கலைஞரிடம் ஒரு நாள் மனோபாலா தயங்கி தயங்கி நின்றுகொண்டிருந்தாராம். அவரை பார்த்துக்கொண்டிருந்த கலைஞர் “என்ன தயங்கி தயங்கி நிக்கிற, என்ன விஷயம்?” என கேட்டிருக்கிறார். “ரஜினி படம் டைரக்ட் பண்றதுக்கு வாய்ப்பு வந்திருக்கு” என்று கூறியிருக்கிறார். அதற்கு கலைஞர் “பண்ணு, யார் வேண்டாம்ன்னு சொன்னா” என கூறியிருக்கிறார்.

Kalaignar Karunanidhi

Kalaignar Karunanidhi

அப்போது மனோபாலா “உங்க தயாரிப்பில் நான் இயக்குகிற படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறதோ, அப்போதுதான் அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கும் என நினைக்கிறேன்” என்று தயங்கி தயங்கி கூறியிருக்கிறார்.

உடனே கலைஞர் மிகப் பெருந்தன்மையாக “ரஜினிகாந்த் படம் பண்ணா உன்னோட எதிர்காலம் பிரகாசமா இருக்கும். நம்ம படம் ஒன்னும் பிரச்சனை இல்லை. அது பின்னாடி பாத்துக்கலாம். ஆனா இப்போ ரஜினி பட வாய்ப்பை தவறவிட்டுடாதே” என்று கூறி மனோபாலாவை அனுப்பிவைத்தாராம் கலைஞர்.

இதையும் படிங்க: நடு ராத்திரியில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஜெயலலிதா… நடந்தது என்ன?

Next Story