உன் வேலைய மட்டும் பாரு… ஒளிப்பதிவாளரை கண்டபடி திட்டிய மனோபாலா… என்ன நடந்தது தெரியுமா?

by Arun Prasad |
Manobala
X

Manobala

தற்போது ஒரு நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் மனோபாலா, ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். இவர் தொடக்கத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் “ஆகாய கங்கை” என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

Manobala

Manobala

எனினும் இவர் இயக்கிய “பிள்ளை நிலா” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து “சிறைப் பறவை”, “ஊர்க்காவலன்” போன்ற பல திரைப்படங்களை இயக்கினார் மனோபாலா. இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி மனோபாலா தன்னை திட்டியது குறித்து ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மனோபாலா, விஜயகாந்த்தை வைத்து இயக்கிய “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற திரைப்படத்திற்கு பி.ஆர்.விஜயலட்சுமியை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்தார். அப்போது அத்திரைப்படத்தின் கதையை பி.ஆர்.விஜயலட்சுமியிடம் கூறியிருக்கிறார்.

BR Vijayalakshmi

BR Vijayalakshmi

ஆனால் அவருக்கோ இத்திரைப்படத்தின் கதை பிடிக்கவில்லை. இந்த கதை நன்றாக இல்லை என மனோபாலாவிடம் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். அதற்கு மனோபாலா “உன்னோட வேலை என்னவோ அது மட்டும் பாரு. இந்த கதை விஷயத்தில் எல்லாம் தலையிடாதே” என்று திட்டினாராம்,.

அந்த நேரத்தில் பிரபு நடிக்க இருந்த “தாலாட்டுக் கேட்குதம்மா” என்ற திரைப்படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வந்ததாம். அத்திரைப்படத்தின் கதையும் அவருக்கு பிடித்திருந்ததாம். ஆதலால் மனோபாலாவிடம் தனக்கு ஆப்ரேஷன் இருப்பதாக பொய் சொல்லிவிட்டு “தாலாட்டுக் கேட்குதம்மா” படத்தில் பணியாற்றப் போய்விட்டாராம்.

Vijayakanth

Vijayakanth

அதன் பின் ஒரு நாள் விஜயகாந்த், பி.ஆர்.விஜயலட்சுமியிடம் “என் படத்துக்கு உன்னால் வேலை பார்க்க முடியல, அப்போ மட்டும் ஆப்ரேஷன். ஆனால் பிரபு நடிக்கிற படத்துல மட்டும் வேலை பாத்துருக்க” என கேலி செய்தாராம்.

BR Vijayalakshmi

BR Vijayalakshmi

பி.ஆர்.விஜயலட்சுமி ஆசியாவின் முதல் பெண் இயக்குனர் ஆவார். இவர் பாக்யராஜ் இயக்கிய “சின்ன வீடு” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அக்காவுக்கு வந்த வாய்ப்பை லாவகமாக கவ்வி பிடித்த ஊர்வசி… அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா?

Next Story