ஒரு படத்துக்கு சம்பளம் கொடுத்துட்டு நாலு படத்துக்கு வேலை வாங்குனாங்க! - மனோபாலாவை ஏமாற்றிய படக்குழு..!

manobala
தமிழ் சினிமாவில் இயக்குனர், காமெடியன் என இரண்டு முகங்களை வெளிப்படுத்தியவர் நடிகர் மனோபாலா. மனோபாலா இயக்குனராகவும் சரி நகைச்சுவை கதாபாத்திரமானாலும் சரி அதில் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்ய கூடியவர்.
தமிழில் சிறை பறவை, மல்லு வேட்டி மைனர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் மனோபாலா. ஆனால் அவரை ஒரு நகைச்சுவையாளராகதான் பலருக்கும் தெரியும். நகைச்சுவை கதாபாத்திரமாக இதுவரை 150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

manobala
சினிமாவிற்கு வந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொண்டுள்ளார் மனோபாலா. 1982 முதலே சினிமாவில் நகைச்சுவை நாயகனாக நடித்து வரும் மனோ பாலா ஆரம்பத்தில் நிறைய ஏமாற்றங்களை கண்டுள்ளார்.
ஏமாற்றிய படக்குழு:
சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் ஒரு படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் பிரபலமாக இல்லை என்பதால் குறைவான சம்பளமே அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் 16 நகைச்சுவை காட்சிகள் அவர் நடிக்க வேண்டி இருந்தது.
ஒரு நாள் முழுக்க அந்த 16 காட்சிகளும் படமாக்கப்பட்டன. அன்று இரவுக்குள் வசனங்களை பேசி பேசி மனோபாலாவிற்கு வாய் வலிக்க துவங்கிவிட்டது. அதன் பிறகு 16 காட்சிகளும் முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டார். பிறகு டப்பிங் பேசுவதற்காக அவரை மீண்டும் அழைத்தனர்.

Manobala
டப்பிங்கிற்கு வந்தபோது மனோ பாலாவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் 16 நகைச்சுவைகள் நடித்திருந்தார். ஆனால் படத்தில் நான்கு காட்சிகள் மட்டுமே இருந்தன. இதுக்குறித்து இயக்குனரிடம் கேட்கும்போது “உங்களை வைத்து எடுத்த 16 காட்சிகளை நாங்கள் 4 வெவ்வேறு படங்களில் பயன்படுத்திவிட்டோம்” என கூறியுள்ளனர்.
அப்படியான ஏமாற்றங்களை எல்லாம் சமாளித்துதான் தற்சமயம் பெரும் காமெடியனாகி உள்ளார் மனோபாலா.