கமல் என்னிடம் பேசவே மாட்டாரா?.. நடிகையிடம் அழுது புலம்பிய மனோபாலா..

by Rohini |
kamal
X

kamal

கோலிவுட்டில் ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக கதாசிரியராக வலம் வந்தவர் நடிகர் மனோபாலா. திரை உலகில் அனைத்து நடிகர்களுடனும் சமமாக பழகக்கூடிய ஒரு எளிமையான மனிதர் மனோபாலா. இவருடைய அர்ப்பணிப்பு தமிழ் சினிமாவிற்கு மிகவும் இன்றியமையாதது. 40 படங்களுக்கும் மேல் இயக்கி 100 படங்களுக்கும் மேல் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு அச்சாணி போல பதிந்தவர். சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் மிகவும் உரிமையாக பழகக் கூடியவர்.

kamal2

kamal2

அவருடைய இந்த மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது. அனைத்து பிரபலங்களும் நடிகர் மனோபாலாவிற்கு நேரடியாக வந்து தங்கள் அஞ்சலியை செலுத்தினர். ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவையாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ஒரு நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

அவருடைய பாடி ஷேமிங்கை வைத்தும் சிலர் கலாய்ப்பதும் உண்டு. ஆனால் அதைப் பற்றி எதுவும் கவலை கொள்ளாமல் சினிமாவிற்கு தானே என்று மிகவும் எளிதாக நினைத்துக் கொள்ளக் கூடியவர். கோலிவுட்டில் முதன் முதலில் அவருக்கு அடைக்கலம் தந்த வீடு நடிகர் கமலஹாசனின் வீடு.

கமல்ஹாசனின் அண்ணன்களான சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர்தான் மனோபாலாவிற்கு முதலில் அடைக்கலம் தந்தனர் .அதன் பிறகு கமல் பாரதிராஜாவிடம் இவரை உதவி இயக்குனராக சேர்ப்பதற்கு உதவியாக இருந்துள்ளார். ஆனால் கொஞ்ச நாட்கள் கமல் மனோபாலாவிடம் பேசாமல் இருந்தாராம்.

kamal3

kamal3

அப்பொழுது மனோபாலா சுஹாசினியிடம் "உன் சித்தப்பா தானே, நீ சொல்ல வேண்டியது தானே ,என்னிடம் மட்டும் பேசாமல் இருக்கிறார் கமல் "என்று கூறி அழுது புலம்புவாராம். இதைப் பற்றி குறிப்பிட்டு பேசிய சுகாசினி "அவர் ஏதாவது கமலிடம் வாயை கொடுத்திருப்பார் ,அதனால் தான் கமல் பேசாமல் இருந்திருப்பார். மேலும் எங்கள் படத்தையே மிகவும் கிண்டல் அடித்து இதெல்லாம் ஒரு படமா ?என்று பேசக்கூடியவர் மனோபாலா. அதனால்தான் அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனைகள் வந்திருக்கக்கூடும். ஆனால் சிறிது நாட்கள் பிறகு கமலும் மனோபாலாவும் பேசிக் கொண்டார்களாம் .இதை ஒரு பேட்டியில் சுஹாசினி தெரிவித்தார்.

இதையும் படிங்க : நடிகையின் அக்காவிற்கே ரூட் போட்ட ரஜினி!.. கமல் பெயரை சொன்னதும் ஓட்டம் பிடித்த சம்பவம்.. அட புதுசா இருக்கே?..

Next Story