அந்த படத்த ரீமேக் பண்ணனும்!. மனோபாலாவுக்கு இருந்த தீராத ஆசை!.. கடைசிவரை முடியலயே!..
பாரதிராஜாவின் உதவியாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் மனோபாலா. பாரதிராஜாவின் பல திரைப்படங்களில் இவர் வேலை செய்துள்ளார். அதன்பின் இவரே இயக்குனராக மாறினார். ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். சில ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.
ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கிய மனோபாலா கடந்த 15 வருடங்களுக்கும் மேல் நகைச்சுவை நடிகராக பல நூறு படங்களில் நடித்துவிட்டார். இவர் பார்த்தாலே ரசிகர்கள் சிரிப்பார்கள். ஏனெனில் மிகவும் ஒல்லியாக அவரின் தோற்றமே ரசிகர்களை சிரிக்க வைத்தது. சதுரங்க வேட்டை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களை தயாரித்தார். இதில், சதுரங்க வேட்டை 2 படம் வெளியாகவில்லை.
அதேநேரம் ஹெச்.வினோத் இயக்குனராக அறிமுகமான சதுரங்க வேட்டை படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது ஹெச்.வினோத் பெரிய இயக்குனராகவும் மாறிவிட்டார். சினிமா மட்டுமில்லாமல் சில சீரியல்களையும் மனோபாலா இயக்கியுள்ளார். இந்தியன் 2 படத்திலும் மனோபாலா நடித்து கொண்டிருந்தார். ஆனால், திடீரென சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவரின் மரணம் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனோபாலாவுக்கு சில ஆசைகள் கடைசி வரை நிறைவே இல்லை. அதில் முக்கியமானது. 1964ம் வருடம் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது. ஆனால், முத்துராமன், பாலையா, நாகேஷ் போல நடிக்கும் நடிகர்கள் இப்போது யாருமில்லை. எனவே, அவரால் கடைசிவரை அவரால் அப்படத்தை ரீமேக் செய்யமுடியவே இல்லை.