அவ்ளோதான் நம்ம வாழ்க்கைனு இருந்த மனோபாலா!.. அவரின் கெரியரையே தூக்கி நிறுத்திய நடிகர்!..

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக வலம் வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் மனோபாலா. இயக்குனர் என்பதையும் தாண்டி பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர்.

அவருடைய மரணம் இன்று தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய மரணத்திற்கு திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் மனோபாலாவின் இறுதிச்சடங்கு நாளை நடக்க உள்ளதாக அவருடைய மகன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் மனோபாலாவிற்கு சினிமாவில் யாரையும் தெரியாது என்ற சமயத்தில் அவருக்கு அடைக்கலம் தந்த வீடு நடிகர் கமலஹாசனின் வீடுதானாம். கமலஹாசனின் அண்ணனான சாருஹாசன் சந்திரஹாசன் ஆகியோர் மனோபாலாவிற்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.

மேலும் பாரதிராஜாவிடம் அசோசியேட்டிவ்வாக முதன் முதலில் மனோபாலாவை சேர்த்து விட்டதும் நடிகர் கமல் தானாம். தன்னுடன் உதவியாளராக இருந்த மனோபாலாவின் திறமையை கண்டறிந்து அவரை ஒரு இயக்குனராக மாற்றியது பாரதிராஜா.

மனோபாலா முதன் முதலில் இயக்கிய படம் ஆகாய கங்கை. அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அதனை அடுத்து பட வாய்ப்புகள் இன்றி மனோபாலா மிகவும் தவித்து வந்துள்ளார்.

அவரின் நிலையை அறிந்த நடிகர் மோகன் மனோபாலாவிற்கு, தான் ஒரு படம் பண்ணுவதாக கூறியுள்ளார். ஏற்கனவே மனோபாலாவும் மோகனும் நல்ல நண்பர்களாம். அதனால்தான் கால்ஷீட் நான் தருகிறேன் என்னை வைத்து ஒரு படம் எடுங்கள் என்று மனோ பாலாவிடம் மோகன் கூறியுள்ளார்.

18 நாட்கள் மோகன் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். உடனே மனோபாலா அதற்கேற்றவாறு கதையை வடிவமைத்து ஒரு க்ரைம் திரில்லர் கதையை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுத்துள்ளார். அந்தப் படம் தான் பிள்ளை நிலா.

கிரைம் அடிப்படையில் அமைந்த படங்களிலேயே பிள்ளை நிலா என்ற படம் மிகவும் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும். படம் நூறு நாட்களைக் கடந்து மிகவும் வெற்றிகரமாக ஓடியது. மேலும் மனோபாலாவிற்கும் மிகப்பெரிய திருப்புமுனைய ஏற்படுத்திய படமாக பிள்ளை நிலா படம் அமைந்தது.

இதையும் படிங்க : மனோபாலா மரணம்!.. லியோ படத்திற்கு வந்த சிக்கல்!.. எப்படி சமாளிக்க போகிறார் லோகேஷ்?!…

இந்தப் பட வெற்றிக்குப் பிறகு மனோபாலாவிற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிந்தன. கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றவர் மனோபாலா.

 

Related Articles

Next Story