Categories: Cinema History Cinema News latest news

நிறைய இளையராஜா பாட்டை திருடியிருக்கேன்… பெரும் ரகசியத்தை வெளியிட்ட மனோபாலா!.

தமிழ் சினிமாவில் தனித்துவமான திறன் கொண்ட நகைச்சுவை நடிகர்களில் மனோபாலாவும் ஒருவர். சாதரணமாக வாய்வழியாக பேசி நகைச்சுவை செய்வது அனைவராலும் செய்ய முடியும். ஆனால் உடல் மொழியையே நகைச்சுவைக்கு ஏற்றாற் போல மாற்றி அமைத்து நகைச்சுவை செய்ய கூடியவராக நடிகர் மனோபாலா இருக்கிறார்.

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராவதற்காகவே வந்தார் மனோபாலா. சில படங்களை இயக்கவும் செய்தார். ஆனால் இயக்குனராக அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இதனையடுத்து திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

ஒரு நகைச்சுவை நடிகராக அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமாவிற்கு வந்த காலம் முதலே மனோபாலாவிற்கு இளையராஜா பாடல்கள் மீது அதிக விருப்பம் இருந்து வந்தது. ஒவ்வொரு முறை இளையராஜா இசையமைத்ததும் அந்த பாடலை முதல் ஆளாக கேட்டுவிட வேண்டும் என ஆசைப்பட்டார் மனோபாலா.

அதற்காக மனோபாலா செய்த விஷயம்தான் சுவாரஸ்யமானது. மனோபாலா இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ஆளை பழக்கம் பிடித்திருந்தார். ஒவ்வொரு பாட்டையும் இளையராஜா இசையமைத்து முடித்த பிறகு அந்த ஆள் மூலமாக அதை திருட்டு தனமாக வாங்கிவிடுவார் மனோபாலா.

பிறகு தனிமையில் அந்த பாடல்களை கேட்டு மகிழ்ச்சியடைவார். இதனால் இயக்குனருக்கு முன்னே அந்த பாடல்களை கேட்டுவிடுவார் மனோபாலா. இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: தனுஷ்தான் ஹீரோவா! தயவு செஞ்சு வேண்டாம்- பாலிவுட் என்ட்ரிக்கு முட்டுக்கட்டை போட்ட ஸ்ரீதேவி…

Published by
Rajkumar