அடிவயித்த வலிக்குதுன்னு சொன்னாரு… மனோபாலா குறித்து உதவியாளர் சொன்ன விஷயம்!..

by Rajkumar |   ( Updated:2023-05-06 07:49:24  )
அடிவயித்த வலிக்குதுன்னு சொன்னாரு… மனோபாலா குறித்து உதவியாளர் சொன்ன விஷயம்!..
X

தமிழ் திரையுலகில் ஈடு இணையற்ற நகைச்சுவை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் மனோபாலா. ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் இவர் தமிழ் சினிமாவில் வெற்றி கண்டுள்ளார். மனோபாலா நடித்த பல நகைச்சுவை காட்சிகள் எப்போதும் மக்கள் மத்தியில் இருந்து நீங்காது.

சிறுத்தை, கலகலப்பு இப்படி பல படங்களில் சிறப்பாக நகைச்சுவை செய்துள்ளார். மனோபாலா தனக்கென தனி நகைச்சுவை ஸ்டைலை வைத்திருந்தார். அதிகப்பட்சம் மக்கள் அவரது நகைச்சுவை காட்சிகள் மக்களுக்கு பிடிப்பதற்கு இதுவே காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் மனோபாலாவின் திடீர் இறப்பு மக்கள் மத்தியில் மனகவலையை ஏற்படுத்தியுள்ளது. மனோபாலா குறித்து அவரது உதவியாளர் ஒரு பேட்டியில் கூறும்போது எப்படி அவரது உடல்நிலை மோசமானது என விவரித்துள்ளார்.

உடல்நிலையில் பிரச்சனை:

அதாவது பொள்ளாச்சிக்கு ஒரு படப்பிடிப்புக்காக சென்றுள்ளார் மனோபாலா. அப்போது அங்கு அவரது கீழ் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அங்குள்ள ஒரு சின்ன மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விஷயம் உதவியாளர்களுக்கு தெரிந்து அவர்களும் கூட அங்கு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

Manobala
Manobala

அதன் பிறகு அவரை பெரிய மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சேர்த்த பிறகு அவரது உடல் சரியாகியுள்ளது. எழுந்து நடக்கும் அளவிற்கு உடல்நிலை சரியாகி உள்ளது. ஒரு ஆறு நாள் மருத்துவமனையில் இருந்த பிறகு வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு மீண்டும் உடல்நிலை மோசமாகி இறந்துள்ளார். அவர் உடல் பிரச்சனையை மருத்துவமனையிலேயே சரியாக கண்டுப்பிடிக்க முடியவில்லை என கூறுகின்றனர்.

Next Story