ரஜினியாக நடித்த மனோஜ் பாரதிராஜா.. அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் படம்... சுவாரஸ்ய தகவல்

rajinikanth manoj
பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா ஒரு படத்தில் முழுக்க முழுக்க ரஜினியாக நடித்திருக்கிறார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது.

rajinikanth manoj
மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்துல அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா சினிமாவிற்கு வந்தவர் மனோஜ் பாரதிராஜா. ஆனால் இவரை நடிகராக உயர்த்தவே பாரதிராஜா விரும்பினாராம். இதனால் மிகப்பெரிய பொருட்செலவில் தாஜ்மஹால் படம் மூலம் நடிகராக எண்ட்ரியானார். இந்த படத்தில் ராஜீவ் மேனன், மணிரத்னம் என பல முன்னணி பிரபலங்கள் பணியாற்றினராம். படமும் வெளியாகி அவருக்கு தொடர் வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. இருந்தும் அவரால் ஒரு இடத்தினை தக்க வைக்க இயலவில்லை.
வருஷமெல்லாம் வசந்தம், அல்லு அர்ஜூனா, மகா நடிகன், கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனோஜ். இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தில் பணியாற்றி இருக்கிறார். அதுவும் டூப்பாக என்றால் நம்ப முடிகிறதா?

rajinikanth manoj
எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் சிட்டி மற்றும் வசீகரன் இணைந்து வரும் காட்சிகளுக்கு எல்லாம் சிட்டியாக மட்டுமே ரஜினி நடித்தாராம். வசீகரனாக டூப் போட்டவர் மனோஜ் பாரதிராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.