பாரதிராஜாவின் இயக்கத்திலும் ஏ.ஆர். ரகுமான் இசையிலும் உருவான தாஜ்மகால் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் மனோஜ். இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…
ஒரு கைதியின் டைரி படத்தில் தான் அப்பா பெரிய இயக்குனராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். சூட்டிங் ஸ்பாட்டுக்கு எல்லாம் போனது இல்ல. அப்போது இருந்து தான் போக ஆரம்பிச்சேன். பொன் மானே என்ற பாடல்காட்சி எடுத்தாங்க. அப்போ தான் முதன் முதலா அப்பாவோட சூட்டிங்கைப் பார்த்தேன்.
ரஜினி சாருடன் எந்திரன் படத்தில் அதிகமாகப் பழகக்கூடிய வாய்ப்பு கிடைச்சது. நான் தான் அவருக்கு டூப்பா பண்ணிருப்பேன். ஒரு தடவை ஸ்கூல்ல கட் அடிச்சிட்டு ரெண்டு நாள் பிரேக் வேணும்னுட்டு போயிட்டேன். ரஜினி சார் பார்த்துக்கிட்டே இருந்துருக்காரு. இங்க வா. நீ எத்தனாவது படிக்கிற? ஸ்கூல்ல சார். 5ம் வகுப்பு படிக்கிறேன். நீ ஸ்கூல்ல படிக்காம இங்க உனக்கு என்ன வேலை? அப்போ தான் என்னை படப்பிடிப்பு பக்கமே வரக்கூடாதுன்னு என்னை எச்சரித்து அனுப்பினார்.
உதவி இயக்குனராக பணியாற்றிய படம் மணிரத்னத்தின் பம்பாய். அவரை நான் வந்து கடவுள் ஸ்தானத்துல தான் வச்சிருக்கேன். இப்பவும் அவரு என்னைக் கூப்பிட்டார்னா அப்படியே உதறும். பம்பாய் படத்தில சூட்டிங் நடந்த போது மணிரத்னம் சாரோட மேக்கிங் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சது. கண்ணுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார். அப்படி நிறைய ஷாட்கள் எடுப்பாரு.
என்னை பாரதிராஜாவின் மகன் என தெரிந்தே இருந்தாலும் மணி சார் அவங்க சொந்த பிள்ளைய எப்படி பார்ப்பாரோ அப்படி பார்த்துக் கொள்வார்.
மனோஜ் தற்போது இயக்கி வரும் மார்கழித்திங்கள் படத்தில் தந்தைக்கே நடிப்பு சொல்லித் தருகிறார். இதற்கான படங்கள் வைரலாகி வருகிறது.
அமராவதி திரைப்படம்…
விஜய் நடிப்பில்…
விஜய் நடிப்பில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் நடித்துள்ள…