என் அப்பா என் காலை பிடிச்சப்பவே நான் செத்துட்டேன்!. மனம் உருகி பேசிய மனோஜ்!…

by சிவா |   ( Updated:2025-03-29 09:10:56  )
manoj
X

#image_title

Manoj Bharathiraja: தமிழ் திரையுலகில் டிரெண்ட் செட்டராக இருந்தவர் பாரதிராஜா. சினிமா உலகம் ஸ்டுடியோவில் மட்டுமே இயங்கி வந்த நிலையில் ஸ்டுடியோவையே பயன்படுத்தாமல் கிராம புறங்களுக்கு சென்று கிராமங்களின் அழகை, கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டியவர் இவர். இவர் வந்த பின்னர்தான் புது விதமான சினிமாக்களை, புதிய திரை மொழியை ரசிகர்கள் பார்க்கவும், உணரவும் துவங்கினார்கள்.

பதினாறு வயதினிலே, கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இயக்கியவர். இவரின் மகன் மனோஜ். தாஜ்மகால் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் மனோஜ் நடித்த படங்களும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அவரும் 25 படங்கள் வரை நடித்து பார்த்தார். ஆனால், ரசிகர்களிடம் அவர் பிரபலமாகவில்லை.

bharathiraja manoj
bharathiraja manoj

சினிமாவுக்கு வந்த புதிது என்பதால் யாரும் என்னை சரியாக வழிநடத்தவில்லை. எனவே, கதையை சரியாக தேர்ந்தெடுக்காமல் நடித்தேன். அதனால்தான் தோல்வியை சந்தித்தேன்’ என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். 48 வயதான மனோஜ் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரின் மரணம் அவரின் அப்பா பாரதிராஜாவுக்கு கடும் மன உளைச்சலை கொடுத்திருக்கிறது. ஏனெனில், அவரின் ஒரே நம்பிக்கையாக இருந்தவர் அவர்தான்.

இந்நிலையில், மனோஜ் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஊடகம் ஒன்றில் பேசும் மனோஜ் ‘இயக்குனராக வேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. அதனால், மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன். ஒவ்வொரு மகனுக்கும் தனது அப்பா பெருமைப்படி நடக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். எனக்கும் அது இருந்தது.

மணிரத்னம் சார் பாம்பே படம் எடுத்தபோது அந்த படத்தில் வேலை செய்தேன். அதுதான் என் முதல் படம். ஓடி ஆடி வேலை செய்தேன். ஒருநாள் அதிகாலை 2 மணி இருக்கும். என் காலையே யாரே தொடுவது போல உணர்ந்து முழித்துப் பார்த்தால் என் அப்பா என் காலை பிடித்து அழுத்திக்கொண்டிருந்தார். ‘வலிக்குதாடா’ எனக்கேட்டார். அப்போதே நான் செத்துவிட்டேன். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்’என உருகி பேசியிருந்தார்.

Next Story