நீங்களாம் பேசுறீங்க!. என் வலி எனக்குதான் தெரியும்!.. புலம்பிய மனோஜ் பாரதிராஜா!...

#image_title
பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தமிழில் மண் வாசனை மிக்க கிராமத்து திரைப்படங்களை இயக்கியவர் இவர். மேலும், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட பல பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்த்து வெற்றி பெற்றவர் இவர்.
கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மாரியாதை போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இயக்கியிருக்கிறார். பல புதிய நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவருக்கு உண்டு. மண் வாசனை படத்திற்கு கதாநாயகனை தேடி மதுரைக்கு சென்று மீனாட்சி அம்மன் கோவில் அருகே காரில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வளையல் கடை வைத்திருந்த பாண்டியனை அழைத்து ‘நீ சினிமாவில் நடிக்கிறியா?’ எனக்கேட்டு அந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்தார்.

manoj
பின்னாளில் பல படங்களிலும் நடித்தார் பாண்டியன். இப்படி பல ஹீரோக்களை உருவாக்கிய பாரதிராஜாவால் தனது மகன் மனோஜை ஒரு பெரிய ஹீரோவாக ஆக்க முடியவில்லை. தாஜ்மகால் படத்தின் தனது மகன் மனோஜை களமிறக்கினார். மணிரத்னத்தின் கதை, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, வைரமுத்து பாடல்கள் என மனோஜுக்கு எல்லாம் சரியாக அமைந்தும் படம் ரசிகர்களை கவரவில்லை.
தற்போது மனோஜும் மரணமடைந்துவிட்டார். ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மாலை சென்னையில் உள்ள அவரின் வீட்டில் அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரின் உடலுக்கு விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

#image_title
மனோஜுக்கு தன்னால் சினிமாவில் சாதிக்க முடியவில்லையே என்கிற வலி இருந்தது. பாரதிராஜாவுக்கும் அந்த வருத்தம் இருந்து வந்தது. பல இடத்திலும் இந்த கேள்வி மனோஜை துரத்தி வந்தது. இந்நிலையில்தான், சில மாதங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய மனோஜ் ‘நீ என்னோட இடத்துல இருந்து பாரு.. நீ வெளியே இருந்து பேசாத.. நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்குதான் தெரியும். நீ ஜாலியா கமெண்ட் அடிச்சிட்டு போய்டுவ. அதனால் உண்டாகும் வலி என்னன்னு உனக்கு தெரியுமா?.. உனக்கு வந்தாதான் அது புரியும். அதனால் நீ என்ன வேணா சொல்லிட்டு போ.. எனக்கு கவலை இல்ல. கொஞ்ச நாள் மன உளைச்சலில் இருந்தேன். ஏன்டா நம்ம வாழ்க்கை இப்படி போகுதுன்னு தோணும். தூக்கிப்போடு உனக்குன்னு ஒரு லைப் வரும்’ என எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன் என பொங்கியிருந்தார்.
அதேபோல், ஹீரோவா நடிக்க ஆரம்பிச்ச பின்னாடியும் வாய்ப்புகள் வரல. விரக்தியாக இருக்கும். அப்போது அப்பாவிடம் பேசுவேன் ‘நம்பிக்கையோடு இரு. ஒன்றை நேசித்து இதுதான் பண்ணனும்னா அந்த பக்கம் போ. உண்மையாய் இரு. காலம் கனியும் போது உன் கையில் எல்லாம் வரும்’ என எனக்கு அறிவுரை சொல்வார்’ என மனோஜ் பேசியிருந்தார்.