நேற்று நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா இவ்வுலகை விட்டு காலமானார். அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தாஜ்மஹால் படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானவர் மனோஜ் .எத்தனையோ பல ஹீரோ, ஹீரோயின்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜா தன்னுடைய மகனையும் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகம் செய்தார்.
படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில் படம் மட்டும் ஓடவில்லை .தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு எந்த ஒரு படமும் கை கொடுக்கவில்லை .பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட எத்தனையோ பேர் இன்று பெரிய ஆளுமைகளாக இருக்கிறார்கள் .ஆனால் தன் மகனை நினைத்த இடத்திற்கு கொண்டு போக முடியவில்லை என்ற ஒரு வருத்தம் பாரதிராஜாவுக்கு எப்பொழுதுமே இருந்திருக்கின்றது.
இனி நடிகனாக நடிப்பது சரியாக இருக்காது என தன் தந்தையைப் போல இயக்குனராகவும் மாறினார் மனோஜ். மார்கழி திங்கள் என்ற ஒரு படத்தை இயக்கினார். அதில் பாரதிராஜாவையும் நடிக்க வைத்தார். ஆனால் அந்தப் படமும் ஓடவில்லை .இப்படி அடுத்தடுத்து தோல்விகளையே கண்டு வந்த மனோஜ் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் திடீரென அவருடைய இந்த மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது .கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக அவர் காலமான செய்தி அனைவரையும் சோகத்தில் உலுக்கியது. இந்த நிலையில் அவருடைய பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.
பாரதிராஜா இயக்கிய படங்களில் எந்த படங்களை ரீமேக் செய்வீர்கள் என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மனோஜ் சிகப்பு ரோஜாக்கள், அதை விட்டு விட்டால் ஒரு கைதியின் டைரி படத்தை ரீமேக் செய்ய வேண்டும் .அந்தப் படத்தில் என்னுடைய ஒரே சாய்ஸ் தல தான். அஜித்தை வைத்து மட்டுமே அந்த படத்தை எடுக்க ஆசைப்படுகிறேன். அதுவும் அப்பா மகன் கேரக்டரில் அஜித் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் மனோஜ். இவருடைய மறைவுக்கு திரைபிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜய், சூர்யா ,கார்த்தி, சிவகுமார் ,சரத்குமார் என அத்தனை நடிகர்களும் மனோஜ் பாரதிராஜாவுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.