மனோஜ் பாரதிராஜா மரணம்.. நடந்தே சென்று அஞ்சலி செய்த விஜய்.. கண் கலங்கிட்டாரு!

Published On: March 26, 2025
| Posted By : Akhilan

Manoj: தமிழ் திரையுலகத்தின் முக்கிய இயக்குனராக இருந்த பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இறப்பிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். 

தமிழ் சினிமாவில் உதவியக்குனராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. மனோஜருக்கு சினிமாவில் இயக்குனராக உயர வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவாக இருந்திருக்கிறது. ஆனால் பாரதிராஜாவோ தன்னுடைய மகனை ஹீரோவாக மாற்றுவதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

தன்னுடைய ஆசையை மறைத்துக் கொண்டு தன்னுடைய தந்தைக்காக தாஜ்மஹால் படத்தில் நடித்தார். மிகப்பெரிய பிரபலங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட தாஜ்மஹால் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். 

பிடிக்காமல் செய்ததாலோ என்னவோ மனோஜ் பாரதிராஜா பல படங்களில் நடிக்கவில்லை. அல்லி அர்ஜுனா,  வருஷமெல்லாம் வசந்தம், சரத்குமார் மற்றும் முரளியுடன் இணைந்து சமுத்திரம் என இதுவரை அவர் நடித்து ரசிகர்களிடம் ஓரளவு ஹிட் கொடுத்த திரைப்படங்கள் இவ்வளவுதான் என்று கூட சொல்லலாம். 

vijay tvk

அப்பாவிற்காக நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய இயக்குனர் ஆசைக்காகவும் உழைத்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவில் தியேட்டர் ஆர்ட்ஸ் படித்த மனோஜ் ஷங்கரின் எந்திரன் திரைப்படத்தில் அவருக்கு உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். ரஜினிகாந்தின் டூப்பாகவும் நடித்தாராம்.

இந்நிலையில் திடீரென நேற்று மனோஜ் பாரதிராஜா மரணமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியானது.48 வயதாகும் மனோஜுக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்ததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இவரின் இந்த இறப்பு செய்தி பலரும் அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தவும் பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்ல திரையுலகினர் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். பலரும் தற்போது மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மனோஜ் பாரதிராஜாவின் உடல் தற்போது நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதி சடங்கு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அந்த வீட்டில் அருகில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் வீடும் உள்ளது. நடந்து வந்தே விஜய் தற்போது அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்லி கண்ணீர் கலங்கிய காட்சிகளும் வெளியாகி இருக்கிறது.