---Advertisement---

ரஜினி சார்கிட்ட அதை எதிர்பாக்கவே இல்ல!… தளபதி நடிகர் நெகிழ்ச்சி!…

Published on: March 23, 2026
manoj
---Advertisement---

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் மனோஜ் கே.ஜெயன். நடிகை ஊர்வசி இவரைத்தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள். மனோஜ் கே. ஜெயன் தமிழில் தளபதி, தூள், திருமலை, திருப்பாச்சி, திமிரு, வில்லு, பில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்..

சமீபத்தில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மனோஜ் கே.ஜெயன் ரஜினி பற்றிய ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். ‘ரஜினி சாரின் சிவாஜி படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது அருகில் என்னுடைய படம் ஒன்று ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தது. என்னுடைய டிரைவர் ‘ரஜினி சாரை போய் பார்த்து பேசுங்கள்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

எனக்கோ தயக்கமாக இருந்தது.. ஏனெனில் எப்போதோ தளபதி படத்தில் அவருடன் இரண்டு காட்சிகளில் நடித்தேன். அதை அவர் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பாரா? எனக்கு மரியாதை கொடுப்பாரா? என்கிற தயக்கம் இருந்தது. ஆனால் டிரைவர் பல முறை சொன்னதால் அவரை சந்திக்கப் போனேன்..

என்ன பார்த்ததும் ஷங்கர் சார் ‘வாங்க சார்’ என்று பேசினார்.. ‘ரஜினி சாரை பார்க்கலாம்னு வந்தேன்’. ‘அதற்கு உள்ளே போய் பாருங்க’.. என்று சொன்னர். ஒரு ரூமுக்குள் ரஜினி சார், விவேக், கனல் கண்ணன் மூவரும் அமர்ந்து ஒரு காட்சியை டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தார்கள்.. எனக்கு தயக்கமாக இருந்தது..

எனக்கும் ரஜினி சார் அமைந்திருக்கும் இடத்திற்கும் பத்து முதல் 15 அடி தூரம் இருக்கும். ரஜினி சார் என்னை பார்த்தவுடன் உடனே எழுந்து நின்று கையை தலைக்கு மேலே தூக்கி எனக்கு வணக்கம் சொல்லி வரவேற்றார். அப்படி ஒரு சிறந்த மனிதர் அவர்.. எனக்கு அப்படி ஒரு வரவேற்பு கொடுப்பார் என எதிர்பார்க்கவே இல்லை..

அருகில் சென்றதும் ‘என்னை ஞாபகம் இருக்கா சார்?’ என்று கேட்டேன். ‘என்ன இப்படி கேட்டீங்க.. நம்ம தளபதி படத்துல மைசூர்ல ஒன்னா நடிச்சோமே.. மறந்துடுவேனா.. தூள் படம் பார்த்தேன் சூப்பர்’ என்று என்னிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்.. அப்படி ஒரு நடிகரை சினிமாவில் பார்ப்பது மிகவும் கடினம்’ என்றார் மனோஜ். கெ.ஜெயன்.