24 மணி நேரமும் போதையில் இருந்த நடிகை! மகளை பிரித்து கூட்டி சென்ற முன்னாள் கணவர்....!
90களில் தென்னிந்திய சினிமாவில் ஒரு சிறந்த நடிகையாக வலம் வந்தவர் என்றால் அது நடிகை ஊர்வசி தான். முந்தானை முடிச்சு தொடங்கி மூக்குத்தி அம்மன் வரை இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி இவரது நடிப்புக்கு ஈடு இணையே கிடையாது. அந்த அளவிற்கு நடிப்பில் பட்டையை கிளப்புவார். ஆனால் இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகமாக இருந்தது. ஆம் நடிகை ஊர்வசி மலையாள நடிகர் மனோஜ் என்பவரை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் வெறும் 8 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. பின்னர் மகளை தன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் ஊர்வசி வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அவரது கணவர் மனோஜோ, "ஊர்வசி எப்போதும் மது போதையில் இருப்பவர் அவரை நம்பி மகளை எப்படி ஒப்படைப்பது? என குற்றம்சாட்டி மகளை அவருடன் அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையில் ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனாவும் உயிரிழக்க ஒருபுறம் மகளின் பிரிவு மற்றொரு புறம் சகோதரி மரணம் என ஊர்வசி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
அதன் பின்னர் இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த ஊர்வசி அவரது 43வது வயதில் சிவபிரசாத் என்பவரை மறுமணம் செய்து கொண்டு தற்போது தனது கணவர் மற்றும் மகன் இஷான் ஆகியோருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.