இது எங்க டைம்!.. சொல்றத மட்டும் செய்ங்க!.. இயக்குனர் இமயத்துக்கே ஆர்டர் போட்ட இயக்குனர்..
தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவர் இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அவரது மகன் மனோஜ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தனது தந்தையைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார். என்ன சொல்கிறார்னு தான் பார்ப்போமே...
அப்பாவோட ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியாது. வழக்கமா டயலாக் மட்டும் தான் எழுதி வச்சிருப்பாரு. எது க்ளோஸ்சப் ஷாட், எது மிட் ஷாட்னு எல்லாமே இதுக்குள்ள (தலைக்குள்ள) தான். டப்பு டப்புன்னு ஷாட் எடுத்துக்கிட்டே இருப்பாரு.
அன்னக்கொடி படத்துல மலைக்கு மேல ஒரு ஷாட். கார்த்திகாவுக்கும், பையனுக்கும். வண்டில போறோம். அவரு முன்னாடி போயி எறங்கிட்டாரு. இறங்கி பார்த்தா பாதி வழி மேல ஏறிட்டாரு. அவ்ளோ ஸ்பீடு. எனக்குத் தெரிஞ்சி காலைல 6 மணி இருக்கும். அந்த எனர்ஜிய எல்லாம் பார்த்துட்டு மிரண்டுட்டேன்.
அவரு ஒவ்வொரு கேரக்டருக்கிட்டயும் நடிச்சிக் காமிச்சிட்டுத் தான் வேலை வாங்குவாரு. அதுல 0.1 பர்சன்ட் நடிச்சா போதும். அதுல நான் பிரமிச்சேன்.
சின்ன வயசுல அப்பாவோட அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாத சூழல் இருந்துச்சு. சூட்டிங், படங்கள் அது இதுன்னு ஒரு வருஷத்துல 3 படங்கள் பண்ணிருவாரு. வீட்டு பக்கமே வர மாட்டாரு. ஒரு ஸ்டேஜ் தாண்டின உடனே அது பழகிப் போற மாதிரி வந்த உடனே தான் இவரு வீட்டுக்கே வர ஆரம்பிச்சாரு.
அதுக்கு அப்புறம் நான் நடிக்கப் போயிட்டேன். நான் இல்லங்கறத வீட்ல ஃபீல் பண்ணாங்க. இப்ப நாலு அஞ்சு வருஷமா தான் எது எதை மிஸ் பண்ணினோமோ அதை ரீகேப்சர் பண்றோம். இப்ப ஓரளவுக்கு ஹேப்பி. நான் இழந்த அந்த நாட்கள் இனிமே வராது. அதுதான் கொஞ்சம் வருத்தமான விஷயம். அது எப்பவுமே இருக்கு.
இப்ப நான் டைரக்ட் பண்றப்ப அப்பாக்கிட்ட ஒரு காட்சியை எடுக்கும் போது எனக்கு லுக் இப்படி வேணும்னு சொன்னேன். அவரு நடிச்சிக் காட்ட, அது இல்ல எனக்கு லுக் இங்க இருந்து இதுவரைககும் வேணும்னு சொன்னேன். இது உங்க காலம் இல்லன்னு சொன்னதும் என்னடா பழி வாங்கறீயா...ன்னாரு. நான் எவ்வளவு ஆர்டிஸ்ட்டுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துருப்பேன்.
அது உங்க காலம். இது என் படம். நான் சொல்றதை மட்டும் செய்யுங்கன்னு சொன்னேன். ஆஃபாயிட்டாரு. அதுல இருந்து நான் என்ன சொல்றனோ அதை மட்டும் செஞ்சிக் கொடுத்துருவாரு. ராமையாங்கற அந்த தாத்தா கேரக்டரை நல்லா பண்ணினாரு. இவ்வாறு மனோஜ் பேசினார்.
மார்கழித்திங்கள் என்ற படத்தைத் தற்போது மனோஜ் பாரதிராஜா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாரதிராஜா, ரக்ஷனா, சுசீந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.