சிம்பு - ஸ்ருதிஹாசனை வைத்து மனோஜ் எடுக்க ஆசைப்பட்ட படம்!. நடக்காமலேயே போயிடுச்சே!...

#image_title
Manoj bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். தாஜ்மகால் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், மனோஜை ஒரு நடிகராக ரசிகர்கள் ஏற்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் பல படங்களிலும் நடித்தார். அதிலும் ஈர நிலம், கடல் பூக்கள் போன்ற படங்களில் மனோஜ் நன்றாகவே நடித்திருந்தார். ஆனாலும், ரசிகர்களிடம் கிளிக் ஆகவில்லை. அவரை ஒரு ஹீரோ மெட்டீரியலாக ரசிகர்கள் பார்க்கவில்லை. இந்த வருத்தம் மனோஜ் மற்றும் அவரின் அப்பா பாரதிராஜா ஆகிய இருவருக்குமே கடைசி வரை இருந்தது.
சரி ஹீரோவாக நடிக்க வேண்டாம். அப்பா வழியில் இயக்குனராகலாம் என நினைத்து மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார். அதில், தனது அப்பா பாரதிராஜாவை நடிக்க வைத்திருந்தார். அந்த படமும் ஓடவில்லை. மனோஜின் ராசியோ என்னவோ அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மொக்கை படங்களாகவே அமைந்துவிட்டது.

#image_title
இதனால் விரக்தி அடைந்த மகனுக்கு அவ்வப்போது ஆறுதலும் சொல்லி வந்தார் பாரதிராஜா. ஆனால், 48வயது வயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை சேத்துப்பட்டு வீட்டில் அவர் மரணமடைந்தார். ஒரு படத்தில் நடித்தபோது நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.
தான் நொடிந்து போன போதெல்லாம் தனக்கு ஆறுதலும், நம்பிக்கையும் சொல்லை தெம்பூட்டியவர் தனது மனைவி மற்றும் மகள்களும்தான் எனவும், அவர்களால்தான் மார்கழி திங்கள் படம் மூலம் நான் இயக்குனராகவே மாறினேன் எனவும் சொல்லி இருந்தார். ஆனால், இயக்குனராகவும் அவரால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. மனோஜுக்கு நிறைய ஆசைகள் இருந்தது.

#image_title
தனது அப்பா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும். அதில் சிம்பு - ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை மனோஜுக்கு இருந்தது. ஆனால், பலமுறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. மனோஜின் மீது சிம்புவுக்கு ஏனோ நம்பிக்கை ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அதேபோல், அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்பட்டார். அதுவும் நடக்கவில்லை.
மனோஜின் உடலுக்கு விஜய், சூர்யா, கார்த்தி, கவுண்டமணி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெற வேண்டும் என்கிற ஆசை நிறைவேறாமலே மனோஜின் உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டது.