சிவாஜி மட்டும்தான் அப்படி நடிப்பாரா என்ன?... மனோரமா 9 வேடங்களில் கலக்கிய திரைப்படம்..

Manorama
தமிழின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த மனோரமா, தனது சிறு வயதில் இருந்தே எண்ணிலடங்கா துயரங்களை சந்தித்தவர். மனோரமா கைக்குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை, மனோரமாவின் தாயாரை கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே விரட்டிவிட்டார்.
கைக்குழந்தையாக இருந்த மனோரமாவை தூக்கிக்கொண்டு மன்னார்குடியில் இருந்து பள்ளத்தூருக்கு குடிபெயர்ந்தார் அவரது தாயார். மனோரமா பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு பண்ணையாரின் வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்கிற பணிக்குச் சென்றார்.

Manorama
மனோரமா சிறு வயதிலேயே நன்றாக பாடக்கூடியவர் என்பதால் அவருக்கு நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. அதன் பின் பல நாடக கம்பெனிகளில் நடித்தார் மனோரமா.
மேலும் எஸ்.எம்.ராமநாதன் என்ற நாடக நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கர்ப்பமான 9 ஆவது மாதத்தில் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்து சேர்ந்தார் மனோரமா. குழந்தை பிறக்கும் வரை ராமநாதன் மனோரமாவை வந்து சந்திக்கவே இல்லை.
குழந்தை பிறந்த 15 ஆவது நாளில் மனோரமாவை சந்திக்க வந்த ராமநாதன், அவரை நாடகத்தில் நடிப்பதற்காக அழைத்தார். “குழந்தை பிறந்து 15 நாட்களே ஆகியிருந்த நிலையில் எப்படி நாடகத்தில் நடிக்க முடியும்” என கூறி கணவரிடம் செல்ல மறுத்துவிட்டார். அதன் பின் அவரது கணவர் மனோரமாவை பார்க்கவே வரவில்லை.

Manorama
எனினும் ஒற்றை தாயாக இருந்து தனது குழந்தையை சிறப்பாக வளர்த்தார் மனோரமா. அதன் பின் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகையாகவும் வலம் வளர்ந்தார். இவ்வாறு பல சோதனைகளை தாண்டி தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த மனோரமா 9 வேடங்களில் நடித்த திரைப்படம் குறித்து ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்த திரைப்படம் “நவராத்திரி”. இத்திரைப்படம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார்.

Kankatchi
இத்திரைப்படத்தை போலவே ஏ.பி.நாகராஜன், மனோரமாவையும் 9 வேடங்களில் நடிக்க வைத்தார். அத்திரைப்படத்தின் பெயர் “கண்காட்சி”. இத்திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் மனோரமா முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் மனோரமாவுடன் சிவக்குமார், குமாரி பத்மினி ஆகியோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.