மக்களுக்கு நீ என்ன செஞ்சுருக்க...? விஜயகாந்துக்கு ஆதரவாக ரஜினியை வெளுத்து வாங்கிய ஆச்சி..
அரசியல் எண்ணம் பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களை பெரும் உயரத்திற்கும் கொண்டு போகும் அதே சமயம்
பாதாளத்திற்கும் தள்ளிவிடும். தமிழ் சினிமாவில் இருந்து எண்ணற்ற நட்சத்திரங்கள் அரசியலில் சாதித்துள்ளனர். முக்கியமாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி.
இவர்கள் வழியில் நடிகர் விஜயகாந்த், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ. சந்திரன் ஆகியோரெல்லாம் நடிக்கும் போதே பொது வாழ்க்கையில் ஈடுபட தொடங்கிவிட்டனர். ஒரு சமயம் வாகை சந்திரசேகர் கூறும் போது நான், விஜயகாந்த் எல்லாம் 1986 ஆம் ஆண்டில் இருந்தே ஒரு போராட்டத்திற்கு சென்று வந்தோம் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்கள்: கலைஞர்-எம்.ஜி.ஆரின் மோதலில் பலியான நடிகர்…! 20 படங்களின் வாய்ப்பு பறிக்கப்பட்ட சம்பவம்…
இவர்களை அடுத்து ரஜினியும் கமலும் நாங்களும் அரசியலுக்கு வருகிறோம் என்று கூற ஒரே போர்க்களமாக தான் இருந்தது. கமல் தனியே கட்சி ஆரம்பித்து அவரின் நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். அதே போல் ரஜினியும் வருகிறேன், வருவேன், என ஆட்டம் காண்பித்து அடங்கி விட்டார்.
இந்த நிலையில் விஜயகாந்த், ரஜினி இவர்களின் அரசியல் எண்ணம் பற்றி ஒரு சமயம் ரஜினிகாந்திடம் சண்டையே போட்டாராம் ஆச்சி மனோரமா. ரஜினியை பார்த்து நீ மக்களுக்காக எதாச்சும் பண்ணியிருக்கிறாயா? பின்ன எப்படி அரசியலுக்கு வர முடியும்? என்றெல்லாம் விஜயகாந்துக்கு ஆதரவாக மனோரமா பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.