ரஜினியை கிண்டலடித்த நபர்.. சட்டையை பிடித்து இழுத்து அடித்த மனோரமா..
சிறு வயது முதலே நாடகத்தில் நடித்து பின்னாளில் சினிமாவில் நடிகையாக மாறியவர் மனோரமா. காமெடி, குணச்சித்திர வேடம் என கலக்கியவர். பல மொழிகளிலும் சேர்த்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கமல், ரஜினி, அஜித், விஜய், தனுஷ் என 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்த நடிகை இவர். திரையுலகில் எல்லோரும் இவரை ஆச்சி என அழைப்பார்கள்.
மனோரமா ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி நடித்து 1980ம் வருடம் வெளிவந்த திரைப்படம் பில்லா. இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஒன்று டானாகவும், மற்றொன்று தெருவில் கூத்தாடும் கலைஞராக நடித்திருப்பார். அந்த வேடத்தில் ரஜினி பெண்ணை போல் மேக்கப், பொட்டு, லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு நடித்திருந்தா. ரஜினியுடன் சேர்ந்து மனோரமாவும் நடித்திருப்பார்.
இந்த படத்தின் சில காட்சிகள் சென்னை மெரினா கடற்கரை அருகே படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் ரஜினியை மோசமாக கிண்டலடிக்க கோபமடைந்த மனோரமா அவரின் சட்டையை பிடித்து பாய்ந்து அடித்தாரம். அதன்பின் படப்பிடிப்பு குழுவினர் வந்து அந்த பிரச்சனையை சரி செய்து அந்த நபரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்களாம்.
அதே மனோரமாதான் பின்னாளில் அதிமுகவில் இருந்த போது தேர்தல் பிரச்சாரத்தில் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு தான் தயாரித்து நடித்த அருணாச்சலம் படத்தில் ரஜினி அவரை நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வடிவேலு படத்தில் நாகேஷுக்கும் பிரச்சினையா? அச்சச்சோ இப்படியெல்லாம் நடந்துச்சா?