Connect with us
Kamal Haasan and Manorama

Cinema News

“கமல் சாகுறத என்னால பாக்க முடியல”… தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுத மனோரமா…

1983 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஜெயபிரதா, சரத்பாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் “சாகர சங்கமம்”. இத்திரைப்படம் “சலங்கை ஒலி” என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது.

Sagara Sangamam

Sagara Sangamam

பரதநாட்டியத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்த பாலு என்ற கதாப்பாத்திரம், கிளைமேக்ஸ் காட்சியில் இறந்துவிடுவது போன்று படமாக்கியிருந்தார்கள். இந்த காட்சி பார்வையாளர்கள் பலரையும் அழவைத்தது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்தபோது நடந்த ஒரு உணர்ச்சிகரமான சம்பவத்தை குறித்து இயக்குனரும் நடிகருமான மனோபாலா, தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

Manobala

Manobala

“சலங்கை ஒலி” திரைப்படத்தை பார்த்தபோது அத்திரையரங்கில் பலரும் எழுந்து கைத்தட்டினர். ஆனால் இருவர் மட்டும் அப்படியே உட்கார்ந்திருந்த நிலையில் அழுதுகொண்டிருந்தார்களாம். அவர்கள்தான் மனோபாலாவும் மனோரமாவும்.

Actress Manorama

Actress Manorama

“சலங்கை ஒலி” போன்ற அழுத்தம் கொடுக்கும் திரைக்கதையில் கமல்ஹாசன் இறந்துபோனது அவர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. உடனே கமல்ஹாசனின் தோள்களை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் அழுதிருக்கிறார்கள். “என்னால் சாப்பிட கூட முடியாது. துக்கம் தொண்டையில் அடைத்துவிட்டது” என்று மனோரமா அழுதுகொண்டே கூறினாராம். அதன் பின் மனோபாலாவை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று தேநீர் கொடுத்து தேற்றினாராம் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: பரதநாட்டியம் ஆடிய மணி ரத்னம் மனைவி… பங்கமாய் கலாய்த்து தள்ளிய இளையராஜா… அடப்பாவமே!!

Kamal Haasan

Kamal Haasan

இது குறித்து மேலும் பேசிய மனோபாலா, “கலைக்காக உயிரையே கொடுக்கும் வெகு சில நடிகர்களில் கமல்ஹாசன்தான் மூத்தவர் என நினைக்கிறேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top