மனோரமா முதலில் நடித்த படம் இதுதான்… ஆனால் இந்திய சினிமா இல்லை… அப்போ??

Manorama
தமிழின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த மனோரமா, தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். நடிகர் நாகேஷுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கிய மனோரமா, பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார்.
கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்த மனோரமா, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் பல நாடக மேடைகளில் தனது தனித்துவமான நடிப்பால் பலரையும் கவர்ந்தார்.
மனோரமா “மாலையிட்ட மங்கை” என்ற திரைப்படத்தில்தான் அறிமுகமானார் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. அவர் அதற்கு முன்பே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Manorama
ஆனால் அத்திரைப்படம் தமிழ் படம் இல்லை. அது ஒரு சிங்களப் படம். அதாவது 1957 ஆம் ஆண்டு “சுகுமலி” என்ற சிங்கள திரைப்படத்தில் மனோரமா நடித்தார். அத்திரைப்படம்தான் மனோரமா நடித்த முதல் திரைப்படம் ஆகும்.
மனோரமா நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில், நடனம் கற்றுக்கொள்வதற்காக ஒரு டான்ஸ் குழுவில் சேர்ந்தாராம். அங்கே அவருக்கு நடனம் கற்றுக்கொடுத்த டான்ஸ் மாஸ்டர் மூலம்தான் அவருக்கு சிங்கள திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாம்.

Manorama
மனோரமாவும் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். சிங்கள வசனங்களை முதலில் தமிழில் எழுதிவிட்டு, அதன் பிறகு அந்த வசனங்களை மனப்பாடம் செய்து பின் அத்திரைப்படத்தில் நடித்ததாக மனோரமா ஒரு பேட்டியில் கூறியுள்ளாராம்.