யாரிடமும் சான்ஸ் கேட்டு நடிக்காத மனோரமா ஆச்சி!..அப்படிப்பட்டவரை வாய்ப்பிற்காக கெஞ்ச வைத்த பிரபலம்!..
கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்த மனோரமா, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் பல நாடக மேடைகளில் தனது தனித்துவமான நடிப்பால் பலரையும் கவர்ந்தார். நடிகர் நாகேஷுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கிய மனோரமா, பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார்.
தமிழின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த மனோரமா, தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார்.
இதையும் படிங்க : பாலசந்தரை பார்த்து வாயடைத்த தாமு… அதுக்கு முன்ன என்ன செஞ்சாருன்னு கேளுங்க… சுவாரஸ்ய பின்னணி
மனோரமா “மாலையிட்ட மங்கை” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்றிலிருந்தே தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத காமெடி மங்கையாக விளங்கி வந்தார். இவரின் திறமையை பார்த்து பல இயக்குனர்கள் இவரின் வீட்டு வாசற்படியில் தவமிருந்திருக்கின்றனர்.
என்றைக்குமே யாரிடமும் பட வாய்ப்பிற்காக போய் நின்றதில்லை நம்ம ஆச்சி. ஆனால் ஒருத்தரிடம் மட்டும் சான்ஸ் கேட்டிருக்கிறார். அது வேறு யாருமில்லை, நடிகரும் இயக்குனருமான பாக்யராஜிடம் தான். அவரின் படங்களை பார்த்து பிரமிப்பில் இருந்த ஆச்சி சின்னவீடு படத்தின் சூட்டிங்கில் இருந்த பாக்யராஜை சந்தித்து உங்கள் படங்களில் ஒரு வேடமாவது நான் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டாராம். இதை பற்றி பாக்யராஜிடம் கேட்ட போது அவர் கேட்டதின் பேரில் தான் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் மனோரமாவிற்கு வாய்ப்பு கொடுத்தேன் என்று பாக்யராஜ் தெரிவித்தார்.