வயித்துல குழந்தை.. விட்டுச்சென்ற கணவர்! மனோரமா எடுத்த துணிச்சலான முடிவு

by Rohini |   ( Updated:2023-07-04 01:38:09  )
mano
X

mano

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் மனோரமா. நகைச்சுவையில் பின்னி பிடலெடுத்தவர். 60 களுக்கு அப்புறம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் வசப்படுத்தினார். கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் தன் வாழ்நாளை சினிமாவிற்காகவே கழித்தவர். நாடக மேடையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் கலக்கிய மனோரமா கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களோடு பயணித்தார்.

mano1

mano1

ஆல் டைம் ஃபேவரைட் நடிகை

எம்ஜிஆர் சிவாஜியில் இருந்து இன்றைய தலைமுறை நடிகர்களான சூரியா வரைக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சிகரமாக கழித்தாரா என்றால் முழுமையாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணமாக அமைந்தது அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் தான்.

இதையும் படிங்க : ரஜினிக்கு ரெட் கார்டு.. வேட்டிய மடிச்சி கட்டி இறங்கிய தயாரிப்பாளர்.. செம தில்லுதான்!…

சிறு வயது முதலே மனோரமா நன்றாக பாடக்கூடியவர். அதனாலேயே நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரை எளிதாக தேடி வந்தது. நாடகத்தில் அவர் போட்ட விதைதான் வெள்ளித்தறையில் ஜொலிக்க காரணமாக அமைந்தது. நடிகர் முத்துராமன் தனது நண்பர்களுடன் இணைந்து நாடக சபாவை ஆரம்பித்தார். அதில் மனோரமாவுக்கு வாய்ப்பு வர அந்த நாடகக் குழுவின் சார்பாக பல நாடகங்களில் நடித்து வந்தார் மனோரமா.

mano2

mano2

காதல் மலர்ந்தது

அந்த நாடக சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தான் ராமநாதன். அவரும் மனோரமாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராமநாதன் ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் திருமணத்திற்கு பிறகு ராமநாதனுக்கு பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு வராததால் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஒரு பக்கம் மனோரமா அவருடைய வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டே இருந்தார்.

இது ராமநாதனுக்கு ஒரு வித கால்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே மனோரமாவுக்கும் ராமநாதனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டிருந்ததாம். இந்த சமயத்தில் மனோரமாவின் வயிற்றில் வாரிசு உண்டாக ஒன்பதாவது மாதத்தில் ராமநாதன் மனோரமாவை விட்டு பிரிந்து சென்றாராம். ஆனால் தன்னை பார்க்க எப்படியாவது தன் கணவர் வருவார் என காத்துக் கொண்டிருந்த மனோரமாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் தான் வந்திருக்கிறது.

mano3

mano3

அதன் பிறகு தான் இருவரும் பிரிந்து அவரவர் வாழ்க்கையை வாழத் தொடங்கினர். அதனை எடுத்து இரண்டாவது திருமணம் பற்றிய எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் தன்னுடைய குழந்தைக்காகவும் தன் தாயாருக்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கழித்துக் கொண்டிருந்தார் மனோரமா. ஆனாலும் சினிமாவில் முன்னணி நடிகைகள் எட்ட முடியாத ஒரு உயரத்தை அடைந்து இன்று வரை ஒரு மாபெரும் நடிகை என்ற பெயரோடு மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனோரமா.

இதையும் படிங்க : கமல் பாடலால் வந்த பிரச்சினை! இதை என்னால் எடுக்க முடியாது – படத்தை விட்டே விலகிய இயக்குனர்..

Next Story