கொலை வழக்கில் சிக்கிய நாகேஷ்!.. உதவி செய்ய மறுத்த மனோரமா… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன் போன்ற பல டாப் நடிகர்களுடன் காமெடியனாக நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என நாகேஷ் நடிக்காத ரோலே இல்லை என கூறலாம்.
நாகேஷை போலவே பெரும் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் மனோரமா. கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் இவர். நகைச்சுவை கதாப்பாத்திரம் மட்டுமல்லாது வில்லி, குணச்சித்திர கதாப்பாத்திரம் என பன்முக நடிகராகவும் திகழ்ந்தவர் மனோரமா.
கவுண்டமணி-செந்தில் காம்போவிற்கு முன்பு தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காம்போவாக திகழ்ந்தது நாகேஷ்-மனோரமா காம்போதான். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற டாப் நடிகர்கள் நடித்த பல திரைப்படங்களில் நாகேஷும் மனோரமாவும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இப்போதும் ரசிக்கத்தக்கவையாக இருக்கும்.
எனினும் ஒரு காலகட்டத்தில் நாகேஷ் மனோரமாவுக்குமிடையே ஒரு விரிசல் விழுந்தது. அந்த விரிசலுக்கு காரணமாக அமைந்த ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க: சிவாஜி மட்டும்தான் அப்படி நடிப்பாரா என்ன?… மனோரமா 9 வேடங்களில் கலக்கிய திரைப்படம்..
அதாவது நாகேஷ் மனைவியின் தம்பி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் நாகேஷுக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அப்போது நாகேஷ் மனோரமாவிடம் வந்து, “சம்பவம் நடந்த நாள் அன்று உங்களது வீட்டில் நான் இருந்ததாக சாட்சி கூறமுடியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு மனோரமா “இல்லை, நான் அப்படி சாட்சி கூறமாட்டேன்” என கூறியிருக்கிறார். எனினும் விசாரணையில் நாகேஷ் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நாகேஷுக்கும் மனோரமாவுக்கும் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டதாம்.