சூட்டிங்கில் ரஜினியை அசிங்கமாக கலாய்த்த நபர்.. களத்தில் இறங்கி மனோரமா செய்த வேலை!.
1996 ஏப்ரலில் ஆளும் கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று ரஜினி சொன்னார். மனோரமா தான் ஜெயலலிதாவின் தோழி அல்லவா. அவருக்கு ஆதரவாக களம் இறங்கினார். பலரும் எச்சரித்தார்கள். ஆனால் அவரோ களம் இறங்கி ரஜினியை கடுமையாக விமர்சித்தார். இளைஞர்கள் மனதைக் கெடுத்தவர் ரஜினி என்றார். ரஜினி ஸ்டைலாக சிகரெட் பிடித்தால் அதைப் பார்க்கும் இளைஞனும் அப்படியே பிடிக்க ஆரம்பிக்கிறான் என்றார்.
இதையும் படிங்க... நீங்க மட்டும் தான் காப்பி அடிப்பீங்களா? ரஜினி ஸ்டைலில் தளபதி69ஐ தயாரிக்க போவது யார் தெரியுமா?
இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை அளித்தது. ஆனால் ரஜினி தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக அந்த நாள் வந்தது. அது அதே ஆண்டின் மே மாதம் தான்.
எதிர்பார்த்தது போலவே ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது. மார்கெட்டை இழந்தார் மனோரமா. அருணாசலம் படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப்படத்தில் மனோரமாவுக்காக கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. ரஜினி தான் உருவாக்கவே சொன்னாராம். இதையும் படத்தின் டைரக்டர் சுந்தர்.சி.யே சொன்னார்.
8 மாதங்கள் கழிந்தன. அருணாசலம் படம் சக்கை போடு போட்டது. மனோரமாவுக்கு இந்தப் படம் ரெண்டாவது இன்னிங்சைக் கொடுத்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2008 ஜனவரியில் ஆச்சியின் 50 வருட கலைச்சேவையைப் பாராட்டி விழா நடத்தப்பட்டது. ஒரே மேடையில் கலைஞர், ரஜினி, மனோரமா இருந்தனர். எல்லோரும் பரபரப்பாக மனோரமாவை ரஜினி எப்படி பாராட்டப் போகிறார் என்று எதிர்பார்த்து இருந்தனர்.
அப்போது ரஜினி பேசினார். பில்லா படப்பிடிப்பு நடந்தது. அது சென்னை அருகில் உள்ள ஒரு குப்பம். சுத்தி நின்னு பலரும் வேடிக்கை பார்த்தாங்க. நாட்டுக்குள்ள என்னைப் பத்திக் கேட்டுப்பாருங்க... பாட்டுக்கு நான் டான்ஸ் ஆடினேன். அப்போ ஒருத்தர் பரவாயில்லையே... பைத்தியம் நல்லா ஆடுதேன்னு சொன்னார். எனக்கு ரொம்ப அப்செட்டாச்சு. படப்பிடிப்பே ஒரு மாதிரி ஆகிடுச்சு.
உடனே, மனோரமா வேகமா அந்த நபர் கிட்ட போய் சட்டையைப் பிடிச்சு சத்தம் போட்டாங்க. அவரை வெளியேத்துனா தான் நான் நடிப்பேன்னு சொன்னாங்க. அதன்பிறகு அவர் வெளியேறியதும் சூட்டிங் நடந்தது. என் மேல அவ்ளோ அன்பு காட்டினவங்க அந்த ஆச்சி. அவங்க இனி எத்தனை ஆயிரம் முறை அடிச்சாலும் தாங்கிக்குவேன்னு சொன்னார் ரஜினி. அப்போது மனோரமாவின் கண்கள் 1000 வாட்ஸ் பல்ப் போல பிரகாசித்தன.
COPYRIGHT 2024
Powered By Blinkcms