வடிவேலு செய்த அதே தவறை செய்த மனோரமா... அவருக்கு விஜயகாந்த் இவருக்கு யார் தெரியுமா?

by Akhilan |   ( Updated:2022-10-10 12:48:50  )
வடிவேலு செய்த  அதே தவறை செய்த மனோரமா... அவருக்கு விஜயகாந்த் இவருக்கு யார் தெரியுமா?
X

சினிமா பிரபலங்கள் தற்போது நடிப்புலகத்தினை தாண்டி அரசியல் பிரவேசமும் நடத்தி வருகிறார்கள். அப்போது அவர்கள் செய்யும் சிறு தவறு மொத்த சினிமா வாழ்க்கையே காவு வாங்கி விடுகிறது. இதில் சமீபத்திய உதாரணம் வடிவேலு என்றால் 80களில் இந்த இடத்தில் இருந்தவர் மனோரமா.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகியாக நடித்தவர் மனோரமா. ஆச்சி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். இவரின் திரை வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தினை இவர் ஒரு பிரச்சாரமேடையில் விமர்சித்தது தான். ஏகத்துக்கும் ரஜினியை வசைபாடினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த காலக்கட்டத்தில் ரஜினியை அத்துணை இறக்கி யாரும் பேசியது இல்லை. இதனாலே இந்த விஷயம் பெரும் பிரச்சனையாகியது. மனோரமாவின் திரை வாழ்க்கை முடிந்து விடும் என நினைக்கப்பட்டது.

மனோரமா
ஆனால், அந்த பிரச்சனை முடிந்து 6 மாதம் கழித்து அண்ணாமலை படத்திற்கு மனோரமா அழைக்கப்பட்டார். அந்த வாய்ப்பை வழங்க சொன்னதும் ரஜினிகாந்த் தானாம். தன்னை இழிவாக பேசிய சம்பவம் குறித்து மனோரமாவிடம் எதுவுமே கேட்க கூட இல்லையாம். இது மனோரமாவை வருத்தமுற வைத்திருக்கிறது. அவரே ரஜினியிடம் சற்று ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மனோரமா பயோபிக்கில் நடிக்கவேண்டும்… ஏனென்றால்? முன்னணி நடிகையின் ஆசையை தீர்ப்பார்களா தமிழ் இயக்குனர்கள்!

மனோரமாவின் திரை வாழ்வினை பாராட்டி ஒரு விழா தமிழக அரசால் நடத்தப்பட்டது. அதில் தொலைப்பேசியின் மூலம் ரஜினியை அழைத்திருக்கிறார் மனோரமா. அப்போதும், தவறாமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து இருக்கிறார். அப்போது இந்த சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.

மனோரமா

தான் பில்லா படத்தில் நடித்து கொண்டிருந்தேன். ஒருநாள் படப்பிடிப்பில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் என்னை பார்த்து, பைத்தியம், பைத்தியம் என கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த மனோரமா அவர்களை திட்டினார். அடிக்க பாய்ந்தார். அப்படி என்னை அரவணைத்த கை. என்னை எத்துணை முறை வேண்டும் என்றாலும் அடிக்க உரிமை உள்ளது எனக் கூறி இருந்தார் ரஜினி. இதை கேட்ட மனோரமா கண்ணீர் சிந்தினார்.

Next Story