அந்த லெஃப்ட் லெக்கில் மீண்டும் வந்து உதைங்க கேப்டன் என மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்த போதே உருக்கமான கடிதத்தை வெளியிட்டு கதறிவிட்டார் மன்சூர் அலி கான். பிரபலங்கள் மரணங்களின் போது முதல் ஆளாக சென்று குடிப்பழக்கத்துக்கு எதிரான முழக்கத்தை செய்து வரும் மன்சூர் அலி கான். மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த்தின் சாலிகிராம வீட்டுக்கு கொண்டு வந்ததில் இருந்து தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு சென்ற நிலையில் கடைசி வரை விஜயகாந்த் உடல் அருகே அசையாமல் நின்றுக் கொண்டிருக்கிறார் மன்சூர் அலி கான்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக மன்சூர் அலி கானை விஜயகாந்த் நடிக்க வைத்தார். தொடர்ந்து பல படங்களில் மன்சூர் அலி கானுக்கு வாய்ப்புக் கொடுத்தார். படங்களில் வில்லனாக நடித்தாலும், தெனாவட்டாக பேசினாலும் மன்சூர் அலி கான் மனம் குழந்தை போலத்தான் என்றும் அதற்கு இதுதான் ஒரு நல்ல உதாரணம் என விஜயகாந்த் உடல் அருகே அவர் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: செந்தூரப்பாண்டியை பார்க்க வந்த தம்பி விஜய்!.. அந்த 10 செகண்ட் கடைசியா பார்த்து கண் கலங்கிட்டாரே!
விஜயகாந்த் நேற்று அதிகாலை 6.10 மணிக்கு உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். நேற்று இரவு நடிகர் விஜய் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த் தனது நண்பர் விஜயகாந்த் மறைவு தன்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தி உள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அந்தப் படத்தில் ஜோதிகா அழாத நாளே இல்லை! சூர்யா என்ன பண்ணுவார் தெரியுமா? இயக்குனர் சொன்ன தகவல்
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…