நானும் லோகேஷும் அந்த மாதிரி காதலர்கள்...! தன் ஆசையை வெளிப்படுத்திய மன்சூர்... நிறைவேற்றுவரா லோகி பாய்...?
தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ். இவரது படைப்புகள் குறைவு எனினும் எட்டிய உயரம் என்னவோ பெரியது. அதிலும் குறிப்பாக விக்ரம் படம் இவரது வளர்ச்சியை உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
இவர் அடுத்ததாக விஜயை வைத்து ஒரு படத்தை இயக்க ஆயத்தமாக இருக்கிறார். மேலும் வரிசையாக முன்னனி நடிகர்களோடு சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்றும் கூறிவருகிறார்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த கைதி படமும் சக்க போடு போட்டது. ஆனால் அந்த படத்தின் கதை நடிகர் மன்சூர் அலிகானுக்காக எழுதப்பட்டது. மன்சூர் அலிகான் மீது அலாதி அன்புடையவராக இருக்கிறார் லோகேஷ். அவர் எதார்த்தமாக செய்யும் குறும்புத்தனம் தான் இவரை மிகவும் ஈர்த்தது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவருக்காக ஒரு கதையும் எழுதியுள்ளேன் என்றும் கூறினார் லோகேஷ். இந்த சமயத்தில் நடிகர் மன்சூர் நானும் லோகேஷும் காதல் கோட்டை அஜித், தேவையாணி மாதிரி. இதுவரை நாங்கள் சந்தித்ததில்லை. ஆனால் என் மேல் லோகேஷ் இந்த அளவுக்கு பிரியம் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மண்டையை போடுவதற்குள் பெரிதாக எதாவது செய்யவேண்டும் என நினைக்கிறேன். லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறிய செய்தி இப்போது வைரலாகி வருகிறது.