விஜயோட சம்பளம் இவ்ளோதானா? மனுஷன வேற மாதிரி நினைச்சுட்டோமே - உண்மையை போட்டுடைத்த மன்சூர்

by Rohini |   ( Updated:2023-08-16 09:06:04  )
mansoor
X

இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 200 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. லியோ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அவர் நடிக்கும் 68 ஆவது படத்திற்கு அவர் வாங்கக்கூடிய சம்பளம் 200 கோடி என்று கூறுகிறார்கள். ஒரு வேளை லியோ படம் மாபெரும் வெற்றி பெற்றால் அந்த 200 கோடியில் இருந்து இன்னும் அதிகமாகத்தான் சம்பளம் பெறுவார் என்றும் சொல்கிறார்கள்.

அதற்கு ஏற்ற வகையில் அவர் நடித்து வெளியாக கூடிய ஒவ்வொரு திரைப்படமும் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை எட்டி வருகிறது. விமர்சன ரீதியாக ரசிகர்களை திருப்தி அடைய விட்டாலும் வசூல் ரீதியில் உலக சாதனையை படைத்து வருகிறார் விஜய்.

இதையும் படிங்க : அப்போ பிரச்சினை விஜய்தான்! இதுக்கு என்ன சொல்லப் போறீங்க? வெளியான ‘உல்ஃப்’ பட பாடலால் ரசிகர்கள் ஆவேசம்!

தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய ரஜினி கமல் இவர்களையே ஓவர் டேக் செய்து வசூலில் ஒரு மன்னனாக திகழ்ந்து வருகிறார் விஜய். படம் வெளியாவதற்கு முன்பாகவே அவர் நடிக்க கூடிய படங்களுக்கு கோடிக்கணக்கான தொகையில் பிசினஸ் நடந்து வருகிறது.

லியோ படத்திற்கு கிட்டத்தட்ட 450 கோடி அளவில் பிசினஸ் நடந்து முடிந்திருக்கிறது. இது ரிலீசுக்கு முன்புவரைக்கும் தான் .ரிலீஸ்க்கு பிறகு இன்னும் அந்த தொகை பல மடங்கு உயரும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தை பற்றியும் விஜய்யை பற்றியும் மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

விஜயை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் மன்சூர் அலிகான். அவர்கள் இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு படத்தில் நடிக்கும் போது மன்சூர் அலிகானுக்கு நான்கு லட்சம் சம்பளமாம்.ஆனால் அதே படத்தில் ஹீரோவாக நடித்த விஜய்க்கு இரண்டு லட்சம் தான் சம்பளமாம்.

இதையும் படிங்க : நீ ஜெயிச்சிட்ட மாறா!.. விக்ரம் பட வசூலை 6 நாளில் தாண்டிய ஜெயிலர்!.. கெத்து காட்டும் ரஜினி…

இன்று அவர் இந்த அளவுக்கு சம்பளம் வாங்கி நடிக்கிறார் என்றால் சும்மா இல்லை. அந்த அளவுக்கு கடும் உழைப்பை அவர் தந்திருக்கிறார். மேலும் ஒரு ஹீரோயின் உடன் சேர்ந்து டான்ஸ் ஆட சொல்லுங்க. முடியுமா? ஆனால் விஜய் அதை கச்சிதமாக செய்து கொண்டு வருகிறார். ரஞ்சிதமே பாடலுக்கு விடாமல் இந்த வயசிலையும் அந்த ஆட்டம் ஆடினாரே. அதற்கு கிடைத்த பலன் தான் இந்த சம்பளம் என மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் கூறினார்.

Next Story