நடிகர் மன்சூர் அலிகான் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கிட்டத்ட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மன்சூர் அலிகான். இவர் குணசித்திர கதாப்பாத்திரத்திலும், வில்லனாகவும் நடி்ததுள்ளார்.
அடுத்ததாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பல வருடங்களாக சினிமாவில் நடித்தும் கூட இதுவரை ஒருமுறை கூட கமல்ஹாசனோடு நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- இவங்களாலதான் ‘கைதி’ படமே மிஸ் ஆச்சு! மனம் திறந்த மன்சூர் அலிகான்
எனக்கு கமல்ஹாசனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். ஆனால் இதுவரை ஒரு படத்தில் கூட நான் அவரோடு நடித்ததே இல்லை. இனிமேலாவது நடிக்க வேண்டும். குணா படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். ஆனால் நடிக்கமுடியாமல் ஆகிவிட்டது. குணா படத்தில் என்ன கேரக்டர் என்று எனக்கு தெரியாது. ஆனால் அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டார்கள்.
உடைகளுக்கான அளவு கூட வந்து எடுத்துச்சென்றார்கள். ஆனால் சந்தர்ப சூழ்நிலையால் நடிக்க முடியாமல் போய்விட்டது. வரும் காலத்திலாவது அவரோடு சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். அப்போது இடையில் குறுக்கிட்ட நிருபர், விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் உங்களை நடிக்க கேட்டதாக செய்திகள் வெளியானது.
அது உண்மையா என்று கேட்டார். ஆனால் அந்த செய்தியை மன்சூர் அலிகான் மறுத்துவிட்டார். மேலும் வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மாட்டேன். நடிப்பேன். ரஜினியோடு படையப்பா படத்தில் நடித்திருக்கிறேன். கமல் உடன் தான் நடிக்கவில்லை என்று மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- ரஜினி மேல எனக்கு இதுதான் கோபம்!.. அந்த நடிகர பார்த்து கத்துக்கணும்.. பொங்கிய மன்சூர் அலிகான்..
2017 மே…
விவாகரத்துக்கு பிறகு…
முன்பெல்லாம் சினிமா…
தமிழ் சினிமாவில்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…