குண்டாவது?துப்பாக்கியாவது! காஷ்மீரில் அட்ராசிட்டி பண்ணும் மன்சூர் அலிகான்.. வைரலாகும் வீடியோ

mansoor
Mansooralikhan: தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகராக கருதப்பட்டவர் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் முதன் முதலில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றவராக மாறினார். அந்தப் படத்தில் வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் சந்தன கடத்த ல் வீரப்பனை பிரதிபலிக்கும் வகையில் அந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மன்சூர் அலிகான்.
முதல் படமே அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது .அதிலிருந்து விஜயகாந்த்டனும் அவருக்கு நெருக்கமான நட்பு உருவானது. தொடர்ந்து விஜயகாந்த் படங்களிலும் நடித்து வந்த மன்சூர் அலிகான் பார்ப்பதற்கு உண்மையாகவே வில்லன் போலவே இருப்பார். இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு நெகட்டிவ் பெயர்தான் இருந்தது .படத்தில் பெரும்பாலும் பெண்களை கற்பழிக்கும் படியான காட்சிகளிலேயே நடித்து சில பெண்கள் இவர் அருகில் போவதற்கே பயந்து இருக்கின்றனர்.
அப்படி எல்லாம் சம்பவம் நடந்திருக்கிறது .சினிமா மட்டுமல்லாமல் சமூக சேவை அரசியல் என பொதுநல சேவைகளிலும் இவருடைய பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது. அரசியல் சித்தாந்தங்களை தெள்ளத் தெளிவாக பேசக் கூடியவர். யாருக்கும் பயப்படாமல் தப்பு எது சரி எது என எல்லாவற்றையும் நேருக்கு நேராக பேசக்கூடியவராக இருக்கிறார் மன்சூர் அலிகான்.
இவருடைய பேச்சில் தெளிவு இல்லை என்றாலும் தெளிவான கருத்துக்களை முன் வைப்பவர் மன்சூர் அலிகான். இவர் பெரும்பாலும் பேட்டிகளில் பேசும்பொழுது குறும்புத்தனத்துடன் எல்லாவற்றையும் பேசிவிட்டு செல்வார். நிறைய தக் லைப் கமெண்ட்களை அள்ளி வீசுவார். அந்த வகையில் இப்போது உலகமே கதி கலங்கி இருப்பது காஷ்மீரில் நடந்த பஹல்காம் பகுதியில் ஏற்பட்ட அந்த ஒரு கோர சம்பவம் .
அதில் 26 குடும்பங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு அனைத்து உலக நாடுகளையும் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தது. தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட அந்த ஒரு சம்பவத்தை எதிர்த்து உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றனர் .இப்படி காஷ்மீர் செல்லவே பயப்படும் மக்களுக்கு மத்தியில் தற்போது மன்சூர் அலிகான் காஷ்மீர் சென்று அங்கு பனிக்கட்டியில் உருண்டு புரளுவது மாதிரியான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

யாருடன் சென்றார் என தெரியவில்லை. ஆனால் அருகில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். குடும்பத்துடன் சென்றிருக்கிறாரா அல்லது வேறு யாரேனுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த கலவரத்திலும் இப்படி ஒரு கிளுகிளுப்பா என்பதைப் போல இருக்கிறது அவருடைய இந்த வீடியோ.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/DJMF6OJNT1F/?igsh=eTRoOHVoYjI1djhu