மன்சூர் அலிகான் கொடுத்த புது ட்விஸ்டு…! எனக்கு இல்ல எண்ட்டு..! பேசிய எல்லாருக்கும் நோட்டீஸ் உண்டு..!

by Akhilan |
மன்சூர் அலிகான் கொடுத்த புது ட்விஸ்டு…! எனக்கு இல்ல எண்ட்டு..! பேசிய எல்லாருக்கும் நோட்டீஸ் உண்டு..!
X

Mansoor alikhan: த்ரிஷாவை மோசமாக பேசி விட்டதாக கூறி வரிசையாக மன்சூர் அலிகான் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். கடந்த வாரம் மன்சூர் மன்னிப்பு கேட்ட நிலையில் ஒருவழியாக பிரச்னை முடிந்து விட்டதாக நினைத்தனர். ஆனால் மன்சூர் தற்போது ஒரு புது ட்விஸ்ட்டை வைத்து இருக்கிறார்.

லியோ படத்தில் நடித்த போது த்ரிஷாவை கற்பழிக்கும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஆனால் காஷ்மீர் படப்பிடிப்பில் என் கண்ணிலே த்ரிஷாவை காட்டவில்லை என மோசமாக மன்சூர் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது.

இதையும் வாசிங்க:ஓவரா ஆசைபட்டு கடைசில பாலசந்தரிடம் பல்பு வாங்கிய கமல்… அட இப்படி ஒரு சம்பவம் கூட நடந்துருக்கா?…

இதையடுத்து த்ரிஷா ஓபனாகவே இதுப்போன்ற மனிதர்களுடன் இனி நடிக்க மாட்டேன். என்னை குறித்து அவர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன் என ஓபனாக கமெண்ட் தட்டினார். இதையடுத்து இயக்குனர்களும், சிரஞ்சீவியும் த்ரிஷாவுக்கு ஆதரவாக ட்வீட் தட்டினார்.

இதனை தொடர்ந்து, என்னுடைய சக நடிகையாக த்ரிஷாவே என்னை மன்னித்து விடு என மன்சூர் அலிகான் ஓபனாகவே மன்னிப்பு கேட்டார். அதையடுத்து த்ரிஷாவும் தப்பு செய்வது மனிதம். அதை மன்னிப்பது தெய்வீகம் என ட்வீட் செய்து அவர் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார்.

இதையும் வாசிங்க:சிவக்குமார் நடிப்பிற்கு முழுக்கு போட காரணமே அந்த நடிகைதான்!.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!..

இதை தொடர்ந்து புது ட்விஸ்ட்டாக, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறார். தன்னுடைய வழக்கறிஞர் குரு தனஜெயன் மூலம் அமைதியின்மை, கலவரம், அவதூறு, குற்றவியல் மற்றும் பிறரைத் தூண்டும் குற்றச்சாட்டுக்களை முன்னிட்டு வழக்கு தொடர இருக்கிறார்.

மேலும் இந்த வழக்கின் போது அவர் பேசிய முழு வீடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அந்த வீடியோ தன்னை தவறாக சித்தரிக்கும் பொருட்டு எடிட் செய்து இருப்பதையும் நிரூபிப்பேன் எனவும் கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து இந்த பிரச்னை முடியவில்லையா? அடுத்து என்ன நடக்கும் என்பதை திரை ரசிகர்கள் ஆவலுடன் வெயிட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story