மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா?!.. இப்படி ஆகிப்போச்சே!...

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். மறைந்த நடிகர் விஜயகாந்த் தான் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் இவரை வில்லனாக நடிக்க வைத்தார். மன்சூர் அலிகானின் வித்தியாசமான உடல் மொழி, பேசும் ஸ்டைல் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அப்படத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களிலும் வில்லனாக நடித்தார். ஒருகட்டத்தில் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். கடந்த சில வருடங்களாகவே காமெடி கலந்த வில்லனாக நடிக்க துவங்கிவிட்டார். இது ரசிகர்களுக்கு பிடித்துப்போக எல்லா இயக்குனர்களும் அவரை அப்படியே நடிக்க வைத்து வருகின்றனர்.
அப்படி வெளியான நானும் ரவுடிதான், குலேபகாவலி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. எனவே, அதையே மன்சூர் அலிகான் தொடர்ந்து செய்து வருகிறார். லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது திரிஷா பற்றி அவர் சொன்ன கருத்து பரபரப்பை ஏற்படுத்தி மன்னிப்பு கேட்கும் வரை சென்றார்.
ஒருபக்கம், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றுப்போனார். அதன்பின்னர் சமீபத்தில் நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சி துவங்கி வேலூர் தொகுதியில் போட்டியிட்டார் மன்சூர் அலிகான்.
இந்நிலையில், அந்த தொகுதியில் வெறும் 350 ஓட்டுக்களை மட்டுமே பெற்றிருக்கிறார் மன்சூர் அலிகான். காலையில் ஓட்டு என்ணும் இடத்திற்கு வந்த மன்சூர் அலிகான் ‘நமக்கு ஒன்னும் இருக்காது. சும்மா பார்க்க வந்தேன்’ என சொன்னார். அவர் சொன்னது போலவே அவருக்கு மிகவும் குறைவான வாக்குகளே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் வேலூர் தொகுதியில் டெபாசிட் இழந்திருக்கிறார் மன்சூர் அலிகான்.