Connect with us
mansoor

Cinema News

கேப்டனை கடைசியாக சந்தித்த போது இதைக்கேட்டேன்!.. அழுதுவிட்டார்… கண்கலங்கிய மன்சூர் அலிகான்..

நடன நடிகராகவும், சண்டை காட்சிகளில் நடிக்கும் ஸ்டண்ட் நடிகராகவும் இருந்த மன்சூர் அலிகானை கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தவர் விஜயகாந்த். முதல் படத்திலே இப்படி ஒரு வாய்ப்பு எந்த நடிகருக்கும் கிடைக்காது. அதை மன்சூர் அலிகான் சரியாக புரிந்துகொண்டு சி்றப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அவரின் உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் என எல்லாமே ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. அதன்பின் பல திரைப்படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விஜயகாந்த் நடிக்கும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். வாய்ப்பு கொடுத்து வாழ்வில் ஒளி வைத்தவர் என்பதால் விஜயகாந்தின் மீது அதிக அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் மன்சூர் அலிகான்.

இதையும் படிங்க: விஜயகாந்த் பற்றி மும்பை கார் டிரைவர் சொன்ன விஷயம்!.. அதிர்ந்து போன விஜய பிரபாகரன்..

யார் சொல்லுக்கும் கட்டுப்படாத மன்சூர் அலிகான் விஜயகாந்த் ஒரு வார்த்தை சொன்னால் தட்டமாட்டார். மன்சூர் அலிகானின் மகள் திருமணத்திற்கு கூட விஜயகாந்த் நேரில் சென்று வாழ்த்திவிட்டு வந்தார். அந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி வைரலாவதுண்டு.

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து திரையுலகில் அதிகம் வருத்தப்பட்டவர்களில் மன்சூர் அலிகான் முக்கியமானவர். ஆனால், விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு சினிமா அரசியலில் இருந்து பல வருடங்கள் விலகி இருந்தார். அதோடு, வீட்டிலேயே இருந்தார். பேச முடியாமலும், நடக்க முடியாமலும், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணரமுடியாதவராகவும் இருந்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் கொடுத்த ஐடியா… சத்யராஜ் அடித்த லூட்டி… இதுக்குப் பேருதான் லொள்ளா?..

கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி மரணமடைந்துவிட்டார். அவர் இறந்தபோது முதல் ஆளாக போய் நின்றவர் மன்சூர் அலிகான்தான். விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை அவர் எங்கும் நகரவில்லை. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் ‘அவர் சினிமா, அரசியல் என இரண்டிலிருந்தும் விலகி வீட்டில் இருந்தபோது சில மாதங்களுக்கு முன்பு கடைசியாக அவரை சந்தித்தேன். அண்ணே நீங்கள் கேப்டன் பிரபாகரன் 2 படத்தில் நடிக்க வேண்டும். உங்களுடன் நானும் நடிப்பேன்’ என சொன்னேன்.

முதலில் சிரித்த அவர் அதன்பின் அழுதுவிட்டார். அவரால் பேச முடியவில்லை. அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று காப்பாற்றி இருக்கலாம். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. யார் கேட்டாலும் ‘அவர் நன்றாக இருக்கிறார்’ என்றே தொடர்ந்து சொல்லி வந்தார்கள். அவரின் உடல்நிலை குறித்த உண்மையை மறைத்துவிட்டார்கள்’ என மன்சூர் அலிகான் சொல்லி இருந்தார்.

இதையும் படிங்அஜித்தை சீண்டவே முடியாது.. விஜயகாந்த் பார்த்து ரசித்த ஆளு அஜித்! பிரபலம் சொன்ன புது தகவல்

google news
Continue Reading

More in Cinema News

To Top