உங்க ஆளுங்கன்னு தெரியாது கேப்டன்! –விஜயகாந்தை பார்த்து பயந்த மன்சூர் அலிக்கான்!!

by Rajkumar |
உங்க ஆளுங்கன்னு தெரியாது கேப்டன்! –விஜயகாந்தை பார்த்து பயந்த மன்சூர் அலிக்கான்!!
X

திரைத்துறையில் பெரும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் தருவதில் துவங்கி திரைத்துறைக்கு பல நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த். இதனாலேயே சினிமாவில் யாரிடம் சென்று கேட்டாலும் விஜயகாந்தை பற்றி நல்லவிதமாகவே கூறுவதை பார்க்க முடியும்.

சில காலங்கள் இவர் நடிகர் சங்க தலைவராக இருந்துள்ளார். அவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட காலக்கட்டத்தில் அவருக்கு எதிராக போட்டியிட்டவர் நடிகர் மன்சூர் அலிக்கான். மன்சூர் அலிக்கானுக்கு விஜயகாந்தின் மீது பெரும் மரியாதை உண்டு.

ஒருமுறை நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக மன்சூர் அலிக்கான் தனது ஆட்களை அழைத்து வந்து பிரச்சனை செய்துள்ளார். இந்த விஷயம் விஜயகாந்தின் காதுகளுக்கு சென்றுள்ளது. உடனே விஜயகாந்த் சில ஆட்களை அழைத்து “மன்சூர் அலிக்கானை பிரச்சனை எதுவும் செய்ய வேண்டாம் என விஜயகாந்த் சொன்னார் என சொல்லுங்கள்” என கூறி அனுப்பி வைத்தார்.

அங்கு சென்ற ஆட்கள் மன்சூர் அலிக்கானிடம் பிரச்சனை பண்ண வேண்டாம் என கூறினார்களே தவிர, விஜயகாந்த் சொல்லி அனுப்பினார் என கூறவில்லை. எனவே மன்சூர் அலிக்கானை அவர்களையும் மதிக்காமல் பிரச்சனை செய்துக்கொண்டிருந்தார்.

இதை கேள்விப்பட்டதும் விஜயகாந்த் நேரில் கிளம்பி வந்தார். வந்தவர் மன்சூர் அலிக்கானை பார்த்து சத்தம் போட்டார். “பிரச்சனை பண்ணாதே என சொல்லி ஆட்களை அனுப்பினால் அவர்களையும் மதிக்காமல் பிரச்சனை பண்ணிட்டு இருக்க” என கேட்டார்.

அதை கேட்டவுடன் அமைதியான மன்சூர் அலிக்கான், கேப்டன் உங்க ஆளுங்கக்கிட்ட நான் ஏன் பிரச்சனை பண்ண போறேன்?. இவங்க உங்க ஆளுங்கன்னு எனக்கு தெரியாது கேப்டன் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். அந்த அளவிற்கு மரியாதை மிகுந்த நபராக விஜயகாந்த் சினிமா துறையில் இருந்துள்ளார்.

Next Story